பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிவில் விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகத்தின் ‘அரசு அதிகாரிகளுக்கான திறன் தலைமைத்துவம்’ குறித்த மூன்று நாள் பயிற்சி முகாமை ஐஐசிஏ நடத்துகிறது

प्रविष्टि तिथि: 25 MAY 2023 4:26PM by PIB Chennai

சிவில் விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகத்தின் அரசு அதிகாரிகளுக்கான திறன் தலைமைத்துவம்குறித்த பயிற்சி முகாமை  மத்திய பெருநிறுவன அதிகாரிகள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தன்னாட்சி நிறுவனமான இந்திய பெரு நிறுவன அதிகாரிகள் கல்விக்கழகம் (ஐஐசிஏ) தனது வணிகச்சூழல் பள்ளியின் மூலம் இன்று தொடங்கி மூன்று நாட்களுக்கு (2023 மே 25 முதல் 27 வரை) நடத்துகிறது.

இந்த முகாமின் தொடக்க அமர்வில் ஐஐசிஏ-ன் தலைமை இயக்குநரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு பிரவீன்குமார் உரையாற்றினார். அரசு அதிகாரிகளுக்கும், பெரு நிறுவன தொழில்முறை ஊழியர்களுக்கும், தலைமைத்துவ பயிற்சி முகாம் எவ்வளவு தேவையானது என்பதை சிவில் விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் திரு மணீஷ்குமார் எடுத்துரைத்தார்.

 

******

AD/SMB/AG/KPG


(रिलीज़ आईडी: 1927289) आगंतुक पटल : 213
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी