மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறையின்முன்னெடுப்புகள், 9 ஆண்டு கால சாதனைகள் குறித்து திரு பர்ஷோத்தம் ரூபாலா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
27 JUN 2023 5:33PM by PIB Chennai
கால்நடை உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் கடந்த 9 ஆண்டுகளில் கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை பல்வேறு முக்கிய முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளதாக ஊடகவியலாளர்களிடம் பேசிய போது மத்திய அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா தெரிவித்தார்.
உள்நாட்டு சந்தை, ஏற்றுமதி சந்தைக்காக பால்உற்பத்தி, இறைச்சி உற்பத்தியை அதிகரிக்க கால்நடை உற்பத்தி அதிகரிப்பு உதவும் என்று அவர் கூறினார். விலங்குகளுக்கு பரவும் நோய்களை முழுவதுமாக தடுப்பதற்கு பல்வேறு திட்டங்களையும், உள்கட்டமைப்பு வளர்ச்சியையும் துறை அமல்படுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.
இந்தியப் பொருளாதாரத்தில் வேளாண்துறையின் முக்கிய துணைப்பிரிவாக கால்நடைத்துறை திகழ்கிறது. கடந்த 2014-2015- ம் ஆண்டு முதல் 2020- 21-ம் ஆண்டு வரை இத்துறை 7.93 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. நாட்டில் 303.76 மில்லியன் கால்நடைகள் உள்ளன.
நாட்டின் பொருளாதாரத்தில் 5 சதவீத பங்களிப்பை பால்வளத்துறை அளிக்கிறது. இது 8 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு நேரடி வேலைவாய்ப்பை அளிக்கிறது. உலக பால் உற்பத்தியில் 23 சதவீத பங்களிப்பின் மூலம் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் பால் உற்பத்தி 51.05 சதவீதம் அதிகரித்துள்ளது. 2014-15-ம் ஆண்டு 146.3 மில்லியன் டன்னாக இருந்த பால் உற்பத்தி 2021-22-ம் ஆண்டில் 221.06 மில்லியன் டன்னாக அதிகரித்தது.
கடந்த 8 ஆண்டுகளில் பால் உற்பத்தி ஆண்டிற்கு 6.1 சதவீதம் அதிகரித்துள்ளது. இது உலக அளவில் 1.2 சதவீதமாக உள்ளது. கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்காக 27.65 லட்சம் வேளாண் கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. உலக அளவில் முட்டை உற்பத்தியில் 3-வது இடத்திலும் இறைச்சி உற்பத்தியில் 8-வது இடத்திலும் இந்தியா உள்ளதாக திரு பர்ஷோத்தம் ரூபாலா குறிப்பிட்டார்.
***
AP/IR/AG/KRS
(வெளியீட்டு அடையாள எண்: 1935707)
வருகையாளர் எண்ணிக்கை : 215