ரெயில்வே அமைச்சகம்
782 ரயில் நிலையங்களில் 850 'ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு' விற்பனை நிலையங்கள் செயல்படுகின்றன
प्रविष्टि तिथि:
26 JUL 2023 3:36PM by PIB Chennai
ராஞ்சி கோட்டத்தில் தற்போது 5 விற்பனை நிலையங்கள் உட்பட இந்திய ரயில்வேயில் 782 ரயில் நிலையங்களில் 850 ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு' விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. ஓ.எஸ்.ஓ.பி விற்பனை நிலையங்களின் நாடாளுமன்ற தொகுதி வாரியான தரவு இந்திய ரயில்வேயால் பராமரிக்கப்படவில்லை.
மத்திய அரசின் உள்ளூர் தயாரிப்புக்கு குரல் கொடுப்போம் தொலைநோக்கு பார்வையை ஊக்குவித்தல், உள்ளூர் / உள்நாட்டு தயாரிப்புகளுக்கு சந்தையை வழங்குதல் மற்றும் சமூகத்தின் விளிம்புநிலை பிரிவினருக்கு கூடுதல் வருமான வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகிய நோக்கங்களுடன் 'ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு' (ஓஎஸ்ஓபி) திட்டம் இந்திய ரயில்வேயால் தொடங்கப்பட்டது.
ரயில்வே, தகவல் தொடர்பு மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் இன்று மக்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்த தகவலைத் தெரிவித்தார்.
*****
ANU/IR/RJ
(रिलीज़ आईडी: 1942997)
आगंतुक पटल : 197