பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு திறன்
प्रविष्टि तिथि:
27 JUL 2023 5:09PM by PIB Chennai
இந்திய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களின் தற்போதைய சுத்திகரிப்பு திறன் ஆண்டுக்கு 253.92 மில்லியன் மெட்ரிக் டன் (எம்எம்டிபிஏ) ஆகும். பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் தொழில்நுட்ப பிரிவான உயர் தொழில்நுட்ப மையம் (சி.எச்.டி) தொகுத்த தரவுகளின்படி, இந்திய சுத்திகரிப்பு நிலையங்களின் சுத்திகரிப்பு திறன் 2028 ஆம் ஆண்டில் சுமார் 56 எம்.எம்.டி.பி.ஏ அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய சுத்திகரிப்பு திறன் 253.92 எம்எம்டிபிஏ என்ற நிலையில் 2022-23 ஆம் ஆண்டில் பெட்ரோலிய பொருட்களின் உள்நாட்டு நுகர்வு 223 எம்எம்டிபிஏ ஆக இருந்தது.
பெட்ரோல் மற்றும் டீசல் நுகர்வில் நீண்டகால வளர்ச்சிப் போக்குகள், மாற்று எரிசக்திக்கான அரசின் பல்வேறு முயற்சிகள், அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு, எத்தனால் உள்ளிட்ட உயிரி எரிபொருட்கள், மின்சார வாகனங்கள் (ஈ.வி) போன்றவற்றின் பயன்பாட்டை அதிகரித்தல் உள்ளிட்டவற்றின் அடிப்படையில், இந்த சுத்திகரிப்புத் திறன் திட்டமிடப்பட்ட தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாக இருக்கும்.
இத்தகவலை பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை இணை அமைச்சர் திரு ராமேஸ்வர் டெலி மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
*********
ANU/PLM/KRS
(रिलीज़ आईडी: 1943443)
आगंतुक पटल : 156