ஊரக வளர்ச்சி அமைச்சகம்
பெண்களின் குரல், விருப்பம், முகமை ஆகியவற்றை வலுப்படுத்தும் நோக்கத்துடன், தீன்தயாள் அந்தியோதயா திட்டத்தில் பாலினத்தை முதன்மைப்படுத்துவதற்கான தலையீட்டை தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் இலக்காகக் கொண்டுள்ளது: திரு சரண்ஜித் சிங்
Posted On:
29 JUL 2023 3:34PM by PIB Chennai
ஊரக வளர்ச்சி அமைச்சகம், பொருளாதாரத்தில் பெண்களையும் சிறுமிகளையும் எந்தப் பணிகள் முன்னேற்றும் என்பதற்கான முன்முயற்சி ( ஐ.டபிள்யூ.டபிள்யூ.ஏ.ஜி ) ஆகியவை இணைந்து புதுதில்லியில் பாலின வள மையம் குறித்த இரண்டு நாள் ஆலோசனைப் பயிலரங்கை ஏற்பாடு செய்தன. கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திரு சரண்ஜித் சிங் தனது தலைமை உரையில், 2016 முதல், அந்தியோதயா- தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் (டே-என்.ஆர்.எல்.எம்) பெண்களின் குரல், விருப்பம், முகமை ஆகியவற்றை வலுப்படுத்தும் நோக்கத்துடன் திட்டத்தில் பாலினத்தை பிரதானப்படுத்துவதற்கான தலையீட்டை இலக்காகக் கொண்டுள்ளது என்று குறிப்பிட்டார்.
பயிலரங்கிற்கான சூழலை அமைத்த இணைச் செயலாளர் திருமதி ஸ்மிருதி சரண், டே-என்.ஆர்.எல்.எம் நாட்டில் அமைதியான புரட்சியைத் தொடங்கியுள்ளது என்றும், அதன் உருமாற்ற அணுகுமுறை பெண்கள் தலைமையிலான மற்றும் பெண்களுக்கு சொந்தமான நிறுவனங்களை உருவாக்குவதற்கான கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது என்றும் கூறினார். கிராமப்புற ஏழைப் பெண்களின் சமூக மேம்பாடு, பொருளாதார மேம்பாடு ஆகிய இரண்டு அடிப்படைக் கொள்கைகளை டே-என்ஆர்எல்எம் திட்டத்தின் இரண்டு அடிப்படை கொள்கைகள் என்பதை அவர் எடுத்துரைத்தார்.
க்ரியா பல்கலைக்கழகத்தின் நிர்வாக இயக்குநர் திருமதி ஷரோன் புட்டோ, தலையீடுகளுக்கான முக்கிய கூறுகளை அடையாளம் காண்பதில் ஆதாரங்களை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார்.
சி.எஸ்.ஓ பங்குதாரர்கள் மற்றும் பாலின வல்லுநர்களுடன் 15 மாநிலங்களைச் சேர்ந்த மொத்தம் 75 பங்கேற்பாளர்கள் பயிலரங்கில் பங்கேற்றனர். பயிலரங்கில் நடைபெற்ற கலந்துரையாடல்களில் பாலின வள மையத்தை ஒரு பங்கேற்பு குழு பணியின் மூலம் வலுப்படுத்துவதற்கான முக்கிய கூறுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம், மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட், ஒடிசா, நாகாலாந்து, பீகார், ஆந்திரப் பிரதேசம், ராஜஸ்தான், கேரளா, தெலங்கானா, சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, திரிபுரா ஆகிய மாநிலங்களிலிருந்து பெறப்பட்ட வளமான அனுபவங்கள், நாட்டில் பாலின வள மையத்தை வலுப்படுத்தத் தேவையான முயற்சிகளை மீண்டும் வலியுறுத்தின.
ஜி.ஆர்.சி.யின் தற்போதைய நோக்கம், எங்கள் முன் உள்ள பணிகளின் வரம்பு ஆகியவற்றைப் பிரதிபலிக்க இந்த விவாதங்கள் எங்களுக்கு உதவியுள்ளன என்று இணைச் செயலாளர் திருமதி ஸ்மிருதி ஷரன் நிறைவுரையில் தெரிவித்தார்.
***
AP/SMB/DL
(Release ID: 1943967)
Visitor Counter : 194