மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
பிரதமரின் தொலைநோக்குத் தலைமையின் கீழ் இந்தியா தனது குறைக்கடத்தி (செமி கண்டக்டர்) லட்சியங்களை அடைவதில் வேகமாக முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர்
Posted On:
30 JUL 2023 9:09AM by PIB Chennai
மூன்று நாட்கள் நடைபெறும் செமிகான் இந்தியா 2023இன் இரண்டாவது நாளில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை இணையமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் உரையாற்றினார். குறைக்கடத்தி தொழில்துறையில் இந்தியாவின் வளர்ந்து வரும் உறுதிப்பாட்டை செமிகான் இந்தியா மாநாடு 2023 வெளிப்படுத்துகிறது என்று கூறிய அவர், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ் இந்தியா தனது குறைக்கடத்தி லட்சியங்களை அடைவதில் எவ்வாறு விரைவான முன்னேற்றங்களை அடைந்து வருகிறது என்பதைப் பற்றி பேசினார்.
மாநாட்டின் இரண்டாம் நாளில் தொழில்துறையினர், கல்வியாளர்கள் மற்றும் அரசு பிரதிநிதிகள் அதிகளவில் பங்கேற்றனர். குறைக்கடத்தி பேக்கேஜிங் உள்ளிட்ட பல்வேறு தகுந்த கருப்பொருள்களில் குழு விவாதங்கள் நடைபெற்றன. "அடுத்த தலைமுறை வடிவமைப்புகள்" குறித்த விவாதங்களில் குறைக்கடத்தி துறையில் ஏற்பட்டுள்ள அதிநவீன முன்னேற்றங்கள் மற்றும் எதிர்கால சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டன.
இந்தியாவின் எதிர்கால வடிவமைப்பு மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்த குழு விவாதத்தில் குறைக்கடத்தி துறையில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்த சிப் வடிவமைப்பு புத்தொழில் நிறுவனங்களை ஆதரிப்பதில் கவனம் செலுத்தப்பட்டது. இந்தியாவில் சிப் வடிவமைப்பு மற்றும் குறைக்கடத்தி தொடர்பான தொழில்களில் உள்ள சாத்தியக்கூறுகள் மற்றும் வாய்ப்புகள் குறித்து இதில் விவாதிக்கப்பட்டது.
***
AP/BR/DL
(Release ID: 1944134)