ஆயுஷ்
பாரம்பரிய மருத்துவம் குறித்த முதலாவது உலகளாவிய உச்சி மாநாட்டில் 75-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றுள்ளன
பாரம்பரிய மருத்துவத்திற்கு உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது: திரு சர்பானந்த் சோனோவால்
Posted On:
17 AUG 2023 6:38PM by PIB Chennai
குஜராத்தின் காந்திநகரில் ஜி 20 சுகாதார அமைச்சர்கள் கூட்டத்துடன் பாரம்பரிய மருத்துவம் குறித்த முதலாவது உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய உச்சி மாநாடு இன்று தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டாக்டர் டெட்ரோஸ் அதானம் கெப்ரேயஸ் மற்றும் மத்திய ஆயுஷ் அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா ஆகியோர் ஆயுர்வேதத்தின் கடவுளான தன்வந்திரிக்கு அர்ப்பணிக்கப்பட்ட மங்களகரமான பாடல்களுடன் குத்து விளக்கை ஏற்ற அழைக்கப்பட்டனர்.
குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர ரஜினிகாந்த் படேல், மத்திய ஆயுஷ் இணை அமைச்சர் டாக்டர் முஞ்ச்பாரா மகேந்திரபாய் கலுபாய் மற்றும் உலக சுகாதார அமைப்பின் மூத்த பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர் .
தொடக்க உரையாற்றிய டாக்டர் டெட்ரோஸ் அதானம், "பாரம்பரிய மருத்துவம் மனிதநேயத்தைப் போலவே பழமையானது என்று கூறினார். இருப்பினும், இது கடந்த கால பழக்கம் மட்டுமல்லாமல், இது இன்றும் சமூகங்கள் மற்றும் கலாச்சாரங்களில் வளர்ந்து வரும் பழக்கத்தைக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தைப் பாராட்டிய அவர், நாட்டின் மருத்துவ முறையைப் பாராட்டினார். கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதாரத்தில் பாரம்பரிய மருத்துவத்தின் தடையற்ற ஒருங்கிணைப்பை டாக்டர் டெட்ரோஸ் குறிப்பிட்டார்.
கூட்டத்தில் உரையாற்றிய திரு சர்பானந்தா சோனோவால், வரலாற்று சிறப்புமிக்க உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருத்துவம் உலகளாவிய உச்சிமாநாட்டின் முடிவு எதிர்கால ஜி 20 நாடுகளின் ஒரு பிரத்யேக அமைப்புக்கான பரிந்துரைகளை முன்மொழிய உதவும் என்று கூறினார். மத்திய அரசின் ஒருங்கிணைந்த அணுகுமுறையின் விளைவாக அனைத்து எய்ம்ஸ் மருத்துவமனைகளிலும் பிரத்யேக ஆயுஷ் துறைகள் நிறுவப்படுகின்றன என்பதை அவர் கூட்டத்தில் நினைவூட்டினார்.
பிரதமர் திரு. நரேந்திர மோடி, ஆயுஷின் செயல்திறனைப் பற்றி தெளிவான பார்வையைக் கொண்டிருந்ததால்தான் இவை அனைத்தும் நிகழ்ந்துள்ளன என்றும், இந்தியா மற்றும் உலக மக்களின் நலனுக்காக ஆயுஷ் அமைச்சகத்திற்கு அனைத்து விதமான ஊக்கத்தையும் வழங்குவதற்கான முயற்சிகளை அவர் வலுவாக ஆதரித்தார் என்றும் அவர் கூறினார்.
***
SM/ANU/IR/RS/KPG
(Release ID: 1949987)