அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
கொல்கத்தாவில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர் - சி.ஜி.சி.ஆர்.ஐ-யில் ஒரு வாரம் ஒரு ஆய்வகத் திட்ட நிகழ்ச்சியின்போது, பொது மக்களுக்கான அனுமதி நாள் மற்றும் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது
Posted On:
25 AUG 2023 1:36PM by PIB Chennai
ஒரு வாரம் ஒரு ஆய்வகம் (ஓ.டபிள்யூ.ஓ.எல்)" திட்டத்தின் ஒரு பகுதியாக, கொல்கத்தாவில் உள்ள மத்திய தொழிலக ஆராய்ச்சிக் கவுன்சிலின் கீழ் உள்ள மத்திய கண்ணாடி மற்றும் செராமிக் ஆய்வு நிறுவனத்தில் (சி.எஸ்.ஐ.ஆர்- சி.ஜி.சி.ஆர்.ஐ) 24.08.2023 அன்று பொதுமக்களுக்கான அனுமதி நாள் (ஓபன் டே) மற்றும் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
சி.எஸ்.ஐ.ஆர் - சி.ஜி.சி.ஆர்.ஐ நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் சுமன் குமாரி மிஸ்ரா பங்கேற்பாளர்களை வரவேற்றார். சிறப்பு விருந்தினராக சி.எஸ்.ஐ.ஆர்., கனிமப் பொருட்கள் தொழில்நுட்ப நிறுவன இயக்குனர் திரு ராமானுஜ் நாராயணன் கலந்து கொண்டு, அறிவியலுக்கும், சமூகத்திற்கும் உள்ள தொடர்பை எடுத்துரைத்தார். இதில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, சுடுமண் மண்பாண்டப் பொருள்கள் தயாரிப்பது குறித்து செயல்விளக்கங்களை அளித்தனர். சி.எஸ்.ஐ.ஆர்-சி.ஜி.சி.ஆர்.ஐ தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களும் இந்த நிகழ்வின் போது காட்சிப்படுத்தப்பட்டன.
----
(Release ID: 1952014)
ANU/SM/PLM/KRS
(Release ID: 1952257)