சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

ஒன்றுக்கும் மேற்பட்ட ஊனமுற்றோரின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனத்தில் உலக இயன்முறை மருத்துவதின நிகழ்ச்சிகள் நடைபெற்றன

இடுகை இடப்பட்ட நாள்: 08 SEP 2023 5:46PM by PIB Chennai

உலக இயன்முறை மருத்துவ தினம் செப்டம்பர் மாதம் 8ஆம் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இது உலக அளவில் உள்ள இயன்முறை மருத்துவர்களால் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் இத்துறையை சார்ந்தவர்கள் மக்களிடையே இயன்முறை மருத்துவத்தின் நன்மைகளையும், நுட்பங்களையும் எடுத்துரைக்கின்றனர். மக்களுக்கு உடலியக்கம், தசை பலம் பாதுகாத்தல், உடல் ஆரோக்கியம், மூட்டசைவு என பல விசயங்கள் பற்றி விழிப்புணர்வு  அளிக்கப்படுகிறது. இயன்முறை மருத்துவத்திற்கான உலகக் கூட்டமைப்பு மூலம் 1996 ஆம் ஆண்டிலிருந்து இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

சென்னைக்கு அருகே முட்டுக்காட்டில் மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும், மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுத்துறையின் கீழ் செயல்படும் ஒன்றுக்கும் மேற்பட்ட ஊனமுற்றோரின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனத்தில் உலக இயன்முறை மருத்துவ தின நிகழ்ச்சி செப்டம்பர் 8 அன்று நடைபெற்றது. இதற்கு முன்னதாக செப்டம்பர் 6 முதல் 8 வரை பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சிகள், விநாடி வினா, இ -போஸ்டர் மற்றும் கீல் வாதம் (ஆர்த்ரிடிஸ்) பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

***

AD/SMB/AG/KPG


(வெளியீட்டு அடையாள எண்: 1955612) வருகையாளர் எண்ணிக்கை : 114