ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2023, அக்டோபர் வரை இந்திய ரயில்வே 887.24 மெட்ரிக் டன் சரக்குகள் ஏற்றி சாதனை படைத்துள்ளது

2023 ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் சரக்கு ஏற்றுதல் மூலம் ரயில்வே ரூ.95929.30 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

प्रविष्टि तिथि: 01 NOV 2023 12:51PM by PIB Chennai

2023 ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் இந்திய ரயில்வே 887.25 மெட்ரிக் டன் சரக்குகள்  ஏற்றி  சாதனை படைத்துள்ளது. இது கடந்த ஆண்டு ஏற்றப்பட்ட 855.64 மெட்ரிக் டன்னுடன் ஒப்பிடும்போது சுமார் 31.61 மெட்ரிக் டன் அதிகமாகும். சரக்குகள் ஏற்றுதல் மூலம் கடந்த ஆண்டில் ரூ.92345.27 கோடியாக இருந்த ரயில்வே வருவாய் இந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.95929.30 கோடியை எட்டியுள்ளது, இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது சுமார் ரூ.3584.03 கோடி அதிகமாகும்.

2022 அக்டோபரில் 118.95 மெட்ரிக் டன் சரக்கு ஏற்றப்பட்டதற்கு மாறாக  2023, அக்டோபர்  மாதத்தில், 129.03 மெட்ரிக் டன் சரக்கு ஏற்றுதல் எட்டப்பட்டுள்ளது, இது கடந்த ஆண்டை விட சுமார் 8.47% முன்னேற்றமாகும். 2022 அக்டோபரில் ரூ.13353.81 கோடியாக இருந்த சரக்கு ஏற்றுதல் மூலமான வருவாய், 2023 அக்டோபரில் ரூ.14231.05 கோடியாக உயர்ந்துள்ளது.

நிலக்கரி 64.82 மெட்ரிக் டன், இரும்புத் தாது 14.81 மெட்ரிக் டன், உணவு தானியங்கள் 3.62 மெட்ரிக் டன், உரங்கள்  5.72 மெட்ரிக் டன், கனிம எண்ணெய் 4.35 மெட்ரிக் டன் என சரக்குகள் ஏற்றப்பட்டுள்ளன.

வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட அணுகுமுறை மற்றும் சுறுசுறுப்பான கொள்கை உருவாக்கத்தின் ஆதரவுடன் வணிக மேம்பாட்டு அலகுகளின் பணிகள் இந்த குறிப்பிடத்தக்க சாதனையை நிகழ்த்த  ரயில்வேக்கு உதவியது.

******

(Release ID: 1973689)

ANU/PKV/PLM/KRS


(रिलीज़ आईडी: 1973912) आगंतुक पटल : 149
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Punjabi