சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

ஓய்வூதியதாரர்களுக்கான டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் தொடர்பான இயக்கத்தின் இரண்டாம் கட்டத்தில் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன

நவம்பர் 17, 18 –ம் தேதிகளில் பாரத ஸ்டேட் வங்கி சார்பில் புதுச்சேரியின் பல்வேறு இடங்களில் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு

Posted On: 16 NOV 2023 5:12PM by PIB Chennai

ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத் துறை நாடு தழுவிய டிஜிட்டல் வாழ்நாள்  சான்றிதழை அறிமுகப்படுத்தி அது தொடர்பான விழிப்புணர்வு இயக்கத்தை நடத்தி வருகிறது.

நாடு தழுவிய டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் இயக்கத்தின் இரண்டாவது கட்டம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 100 நகரங்களில் 500 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 50 லட்சம் ஓய்வூதியதாரர்களை இலக்காகக் கொண்டு இந்த இயக்கம், 2023 நவம்பர் 1-ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடத்தப்பட்டு வருகின்றன.

புதுச்சேரியிலும் இந்த டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பாரத ஸ்டேட் வங்கி சார்பில் புதுச்சேரியின் ஜிப்மர், மணாப்பேட்டை, லாஸ்பேட்டை, முதலியார்பேட்டை உள்ளிட்ட இடங்களில் நவம்பர் 17, 18ம் தேதிகளில் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாம்களை ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலத் துறையின் உதவிச் செயலாளர் திரு தீபக் குப்தா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யவுள்ளார். இந்த முகாம்களில் ஓய்வூதியதாரர்களுக்கு, டிஜிட்டல் முறையில் வாழ்நாள் சான்றிதழைச் சமர்ப்பிப்பதற்கான வழிகாட்டுதல் உதவி வழங்கப்படும். இந்தச் சிறப்பு  முகாம்களை ஓய்வூதியதாரர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

இந்த முகாம்கள் நாடு முழுவதும் பெரிய அளவில் வெற்றியடைய ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை பெரிய அளவில் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

***

ANU/AD/PKV/PLM/RS/KRS


(Release ID: 1977433)
Read this release in: English