சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

அஞ்சல் குறை தீர்ப்பு முகாம் வரும் 20-ம் தேதி அன்று நடைபெற உள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 12 DEC 2023 7:06PM by PIB Chennai

கோட்ட அளவிலான அஞ்சல் சேவையின் குறை தீர்க்கும் முகாம் வரும் 20.12.2023 அன்று காலை 11.00 மணியளவில் சென்னை அண்ணாசாலை தலைமை தபால் நிலையத்தில் நடைபெறவுள்ளது.

குறைகளை அனுப்ப வேண்டிய கடைசி நாள் 16.12.2023 ஆகும். சம்பந்தப்பட்ட புகாரில், தபால் அனுப்பப்பட்ட தேதி, நேரம், அனுப்பியவர் மற்றும் பெறுபவரின் முகவரி, ரசீது எண், பணவிடை ( மணியார்டர்), துரித அஞ்சல், பதிவு அஞ்சல் ஆகியவற்றுக்கான விவரங்களை குறிப்பிட்டிருக்க வேண்டும். சேமிப்பு வங்கி, அஞ்சல் காப்பீடு, கிராமிய அஞ்சல் காப்பீடு சம்பந்தமாக புகார் இருப்பின், கணக்கு எண், கணக்கு வைத்திருப்பவரின் பெயர் மற்றும் முகவரி, பாலிசிதாரரின் பெயர், முழு முகவரி, பணம் கட்டிய முழு விவரம், பணம் செலுத்திய அலுவலகத்தின் பெயர், அஞ்சல் துறை சம்பந்தப்பட்ட கடிதத் தொடர்புகள் ஏதேனும் இருப்பின் அதனையும் புகாருடன் இணைக்கும்படி கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

குறைகளை அனுப்ப வேண்டிய முகவரி:

 “அஞ்சல் சேவை குறை தீர்க்கும் முகாம்

திரு என் பிரகாஷ்,

முன்மை அஞ்சல் அதிகாரி

அண்ணா சாலை தலைமை பால்  நிலையம், சென்னை-02.

***

AD/IR/AG/KRS


(வெளியீட்டு அடையாள எண்: 1985594) வருகையாளர் எண்ணிக்கை : 133
இந்த வெளியீட்டை படிக்க: English