சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
வெளிநாட்டில் உள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் தேவை குறித்த அண்மைத் தகவல்
Posted On:
12 DEC 2023 4:16PM by PIB Chennai
2023 செப்டம்பர் மாதத்தில் தேசிய மருத்துவ ஆணையம் (என்.எம்.சி) அடுத்த 10 ஆண்டுகளுக்கு உலக மருத்துவ கல்வி கூட்டமைப்பு (டபிள்யூ.எஃப்.எம்.இ) அங்கீகாரத்தைப் பெற்றது. இது இந்திய மருத்துவ பட்டம் பெற்ற மாணவர்கள் அமெரிக்க மருத்துவ உரிமத் தேர்வு (யு.எஸ்.எம்.எல்.இ) போன்ற பல்வேறு நாடுகளின் தகுதித் தேர்வுகளை எழுத வழிவகுக்கிறது.
இந்திய செவிலியர் குழுமத்தின் (ஐ.என்.சி) படி, செவிலியர்கள் தொடர்பாக பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன:
செவிலியர் மாணவர்கள் வெளிநாட்டில் வேலை செய்ய அதிகாரமளிக்கும் வகையில் செவிலியர் கல்வியில் வெளிநாட்டு மாதிரியை ஐ.என்.சி அங்கீகரித்துள்ளது. கனடாவில் பணிபுரிய விரும்பும் செவிலியர்களுக்காக 2022 ம் ஆண்டில் கனேடிய பல்கலைக்கழகம் மற்றும் ஒரு இந்திய செவிலிய நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் பணிபுரிய விரும்பும் இந்திய செவிலியர்களுக்கு வசதியாக சிங்கப்பூர் குடியரசுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
அனைத்து வடகிழக்கு மாநிலங்களிலும் ஜப்பானிய மொழியைக் கற்பிக்க வேண்டிய அவசியம் இருந்தது, மேலும் வடகிழக்கு மாநிலங்களில் ஜப்பானிய ஆசிரியர்களை அமர்த்த தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் ஐ.என்.சி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பிராந்திய செவிலியர் கல்லூரியில் வடகிழக்கு மாநில மாணவர்களுக்கான ஜப்பானிய மொழி பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. 2023 ஜூன் மாதத்தில் இருந்து இந்த படிப்பு செவிலியர் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
***
ANU/SM/IR/AG/KRS
(Release ID: 1985596)