சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஓய்வூதியதாரர் நலனை மேம்படுத்த 3 முக்கிய நடவடிக்கைகளை ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர் நலத்துறை மேற்கொண்டுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 06 MAR 2024 4:15PM by PIB Chennai

ஓய்வூதியதாரர்கள் நலனை மேம்படுத்துவதற்காக ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை 3 முக்கிய கொள்கை முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

அகமதாபாத்தில்  2024 மார்ச் 5 அன்று 53-வது ஓய்வுக்கு முந்தைய ஆலோசனை பயிலரங்கை, இத்துறை வெற்றிகரமாக நடத்தியது. மத்திய அரசின் 14 அமைச்சகங்கள் மற்றும் துறைகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட ஓய்வு பெறும் அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர். ஓய்வூதிய நடைமுறை, ஓய்வூதிய பலன் குறித்து அவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

பேங்க் ஆப் பரோடாவில் 7-வது வங்கியாளர்களுக்கான விழிப்புணர்வு  கருத்தரங்கை இது வெற்றிகரமாக நடத்தியது. இதில் 57 வங்கியாளர்கள் பங்கேற்றனர்.

குஜராத்தில் 5 ஓய்வூதியதாரர்கள் நலச் சங்கத்தினருடன் உரையாடல் கூட்டத்தையும் இத்துறை வெற்றிகரமாக நடத்தியது.

***

AD/IR/RS/KRS


(வெளியீட்டு அடையாள எண்: 2011987) வருகையாளர் எண்ணிக்கை : 207
இந்த வெளியீட்டை படிக்க: Khasi , English , Urdu , हिन्दी , Marathi , Punjabi