ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
குஜராத் மாநிலம் தஹேஜில் பெட்ரோநெட் திரவ இயற்கை எரிவாயுவின் பெட்ரோ கெமிக்கல் வளாகத்திற்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார்
प्रविष्टि तिथि:
12 MAR 2024 4:41PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி தஹேஜில் பெட்ரோநெட் திரவ இயற்கை எரிவாயுவின் பெட்ரோ ரசாயன வளாகத்திற்கு அடிக்கல் நாட்டினார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று 50 பாரதிய மக்கள் மருந்தக மையங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், 200-க்கும் மேற்பட்ட வெவ்வேறு இடங்களிலிருந்து இந்த நிகழ்ச்சியுடன் இணைந்திருந்த லட்சக்கணக்கான மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். வளர்ச்சியடைந்த பாரதம் அமைப்பை உருவாக்குவதற்கான வளர்ச்சிப் பணிகள் தொடக்க விழா மற்றும் நாடு முழுவதும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதன் மூலம் தொடர்ந்து விரிவடைந்து வருவதை அடிக்கோடிட்டுக் காட்டினார்.
தஹேஜில் ரூ.20,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பெட்ரோநெட் எல்.என்.ஜியின் பெட்ரோ கெமிக்கல்ஸ் வளாகத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டினார், மேலும் இது நாட்டில் ஹைட்ரஜன் உற்பத்தி மற்றும் பாலிப்ரொப்பிலீனுக்கான தேவையை அதிகரிக்க உதவும் என்று அவர் கூறினார். இன்றைய தொடக்க விழாக்கள் இந்திய இளைஞர்களின் நிகழ்காலத்திற்கானவை என்றும், இன்றைய அடிக்கல் நாட்டப்பட்டிருப்பது அவர்களின் பிரகாசமான எதிர்காலத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது என்றும் கூறினார்.
குஜராத் மாநிலம் தஹேஜில் ரூ.20,600 கோடி மதிப்பிலான ஈத்தேன் மற்றும் புரோபேன் கையாளும் வசதிகளை உள்ளடக்கிய பெட்ரோநெட் திரவ இயற்கை எரிவாயுவின் பெட்ரோ கெமிக்கல் வளாகத்திற்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார். தற்போதுள்ள திரவ இயற்கை எரிவாயு மறு எரிவாயு முனையத்திற்கு அருகில் பெட்ரோகெமிக்கல் வளாகத்தை அமைப்பது திட்டத்தின் மூலதனச் செலவுகள் மற்றும் இயக்கச் செலவில் குறிப்பிடத்தக்க சேமிப்பை ஏற்படுத்தும்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள ரயில் நிலையங்களில் மக்கள் மருந்தக மையங்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த மக்கள் மருந்தகங்கள் மக்களுக்கு மலிவான மற்றும் தரமான பொதுவான மருந்துகளை வழங்கும். இது பயணிகளின் நலனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சுற்றுப்புற பகுதிகளில் அமைந்துள்ள மக்கள் மருந்தக விற்பனை நிலையங்கள் உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் பயணிகளுக்கு பயனளிக்கும். வேலை வாய்ப்புகளை உருவாக்கும். மக்கள் மருந்தக மையங்கள் அனைவருக்கும் மலிவு விலையில் தரமான பொதுவான மருந்துகளை வழங்குகின்றன.
***
(Release ID: 2013780)
PKV/AG/KRS
(रिलीज़ आईडी: 2013802)
आगंतुक पटल : 144