எரிசக்தி அமைச்சகம்
இந்தியாவின் மின்சாரத் துறை மே 30 அன்று 250 ஜிகாவாட் தேவையைப் பூர்த்திசெய்து சாதனை படைத்துள்ளது
Posted On:
30 MAY 2024 8:41PM by PIB Chennai
இந்திய மின்சாரத் துறையின் குறிப்பிடத்தக்க சாதனையாக, 30.05.24 அன்று 250 ஜிகாவாட் மின் தேவையை நாடு பூர்த்தி செய்து சாதனை படைத்துள்ளது. மேலும், மே 29 அன்று, அகில இந்திய சூரியசக்தி அல்லாத தேவை 234.3 ஜிகாவாட்டை எட்டியுள்ளது. இது வானிலை தொடர்பான சுமைகளின் ஒருங்கிணைந்த தாக்கம், இந்த பகுதிகளில் வளர்ந்து வரும் தொழில்துறை, குடியிருப்பு மின் நுகர்வு ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது. மே 30 அன்று, வடக்குப் பிராந்தியமும் இதுவரை இல்லாத அளவாக 86.7 ஜிகாவாட் என்ற சாதனை அளவை எட்டியது. அதே நேரத்தில் மேற்குப் பிராந்தியமும் அதன் அதிகபட்ச தேவை 74.8 ஜிகாவாட்டை எட்டியது.
கூடுதலாக, அகில இந்திய அனல் மின் உற்பத்தி இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியது. குறிப்பாக சூரியசக்தி அல்லாத நேரங்களில் 176 ஜிகாவாட் என்ற உச்சத்தை எட்டியது. இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி அடிப்படையிலான ஆலைகள், எரிவாயு அடிப்படையிலான ஆலைகள் ஆகியவற்றிலிருந்து அதிகபட்ச உற்பத்தியை எளிதாக்கிய பிரிவு -11-ன் அமலாக்கம் இதில் ஒரு முக்கியப் பங்களிப்பாகும். இந்த எழுச்சி, இந்தியாவின் அனல் மின் நிலையங்களின் குறிப்பிடத்தக்க திறன் மற்றும் செயல்பாட்டு திறனை மேலும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களிலிருந்து குறிப்பாக சூரியன் இருக்கும் நேரங்களில் சூரியசக்தி மற்றும் சூரியன் அல்லாத நேரங்களில் காற்று ஆகியவற்றின் ஆதரவும் தேவையைப் பூர்த்தி செய்வதில் மிகவும் குறிப்பிடத்தக்கவையாக இருந்தன.
****
(Release ID: 2022257)
SMB/BR/RR
(Release ID: 2022271)