நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
மத்திய நுகர்வோர் நலன், உணவு, பொது விநியோகத்துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி பொறுப்பேற்றார்
प्रविष्टि तिथि:
11 JUN 2024 3:22PM by PIB Chennai
மத்திய நுகர்வோர் நலன், உணவு, பொது விநியோகத் துறை அமைச்சராக திரு பிரலாத் ஜோஷி இன்று புதுதில்லியில் பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னாள் மத்திய நுகர்வோர் நலன், உணவு, பொது விநியோகத் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், இணை அமைச்சர்கள் திரு பி.எல்.வர்மா, திருமதி நிமுபென் ஜெயந்திபாய் பம்பனியா முன்னிலையில் திரு ஜோஷியிடம் பொறுப்பை ஒப்படைத்தார்.
உணவு, பொது விநியோகத் துறை செயலாளர் திரு. சஞ்சீவ் சோப்ரா, நுகர்வோர் நலத்துறை செயலாளர் திருமதி நிதி கரே மற்றும் அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தனக்கு வாய்ப்பு அளித்ததற்காக பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிப்பதாக திரு பிரல்ஹாத் ஜோஷி கூறினார். 80 கோடி இந்தியர்களுக்கு சேவை செய்ய நேரடியாக தொடர்புடைய இந்த அமைச்சகத்தில் பணியாற்ற பிரதமர் எனக்கு வாய்ப்பளித்ததற்கு நான் நன்றி கூறுகிறேன் என்று திரு ஜோஷி குறிப்பிட்டார்.
***
SMB/IR/AG/RR/DL
(रिलीज़ आईडी: 2024320)
आगंतुक पटल : 330