நிதி அமைச்சகம்
வேளாண் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், பல்வேறு தட்பவெப்ப நிலைகளுக்கு ஏற்ற பயிர் ரகங்களை உருவாக்கவும் ஆராய்ச்சியில் கூடுதல் கவனம் செலுத்தப்படும்
प्रविष्टि तिथि:
23 JUL 2024 12:58PM by PIB Chennai
வேளாண் துறையில் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, வேளாண் ஆராய்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என மத்திய பட்ஜெட் 2024-25-ல் அறிவிக்கப்பட்டுள்ளது. இயற்கை விவசாயத்தை ஊக்குவித்தல், தேசிய கூட்டுறவுக் கொள்கை உள்ளிட்ட பல நடவடிக்கைகளும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன.
வேளாண் ஆராய்ச்சி சூழலை மாற்றி அமைத்தல்
உற்பத்தித் திறனை அதிகரிப்பது பல்வேறு தட்பவெப்ப நிலைகளுக்கு உகந்த பயிர் ரகங்களை உருவாக்குவது ஆகியவற்றில் கவனம் செலுத்தும் வகையில், வேளாண் ஆராய்ச்சி அமைப்பில் விரிவான மறுஆய்வு ஒன்றை அரசு மேற்கொள்ளும் என்று மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று 2024-2025-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த அவர், இதுபோன்ற ஆராய்ச்சிகள் நடத்தப்படுவதை அரசும் தனியார் துறை வல்லுநர்களும் மேற்பார்வையிடுவார்கள் என்று கூறினார்.
இயற்கை விவசாயம்
அடுத்த இரண்டு ஆண்டுகளில், நாடு முழுவதும் ஒரு கோடி விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் ஈடுபடும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் நிதியமைச்சர் கூறினார்.
தேசிய கூட்டுறவுக் கொள்கை
கூட்டுறவுத் துறையின் முறையான, சீரான, ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக தேசிய கூட்டுறவுக் கொள்கையை அரசு கொண்டு வரும் என்று நிதி அமைச்சர் கூறினார். கிராமப்புற பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதையும், பெரிய அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதையும் இந்தக் கொள்கை இலக்காக் கொண்டிருக்கும் என்று அவர் கூறினார்.
******
PLM/KR
Release ID: 2035588
(रिलीज़ आईडी: 2035829)
आगंतुक पटल : 138
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Hindi_MP
,
Marathi
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada