சுற்றுலா அமைச்சகம்
பசுமை சுற்றுலா
Posted On:
22 JUL 2024 3:50PM by PIB Chennai
சுற்றுலா அமைச்சகம் பல்வேறு முன்முயற்சிகள் மூலம் இந்தியாவை முழுமையான முறையில் மேம்படுத்துகிறது. அதன் தொடர்ச்சியான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக; பசுமை சுற்றுலா உட்பட இந்தியாவின் பல்வேறு சுற்றுலாத் தலங்கள் மற்றும் தயாரிப்புகளை மேம்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பசுமை சுற்றுலா மற்றும் சாகச சுற்றுலாவுக்கான விருப்பமான சர்வதேச இடமாக இந்தியாவை நிலைநிறுத்த, சுற்றுலா அமைச்சகம் பசுமை சுற்றுலா மற்றும் சாகச சுற்றுலாவுக்கான தேசிய உத்திகளை வகுத்துள்ளது.
அமைச்சகத்தின் ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் சுற்றுலா உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான கருப்பொருள்களில் பசுமை சுற்றுலாவும் ஒன்றாகும். ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் 2015-16 முதல் 2018-19 வரை உத்தராகண்ட், தெலங்கானா, கேரளா, மிசோரம், மத்திய பிரதேசம் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு ரூ. 415.44 கோடி நிதி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு அதில் ரூ. 399.22 கோடி விநியோகிக்கப்பட்டுள்ளது.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
(Release ID: 2035017)
PKV/BR/RR
(Release ID: 2036193)