சுற்றுலா அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு

प्रविष्टि तिथि: 25 JUL 2024 2:58PM by PIB Chennai

உலக சுற்றுலா சந்தையில் இந்தியாவின் பங்களிப்பை அதிகரிக்கும் வகையில் மத்திய சுற்றுலா அமைச்சகம் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.  சுற்றுலா வர்த்தகம், மாநில அரசுகள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களுடன் ஒருங்கிணைந்து இதற்கான பணிகளை செயல்படுத்தி வருகிறது.  இந்தியாவில் உள்ள சுற்றுலா தலங்களுக்கான சந்தைகளை மேம்படுத்த தொழில்துறை நிபுணர்கள் மற்றும் தொடர்புடையவர்களுடன் அரசு இணைந்து செயல்பட்டு வருகிறது. 2021-ம் ஆண்டு 1.52 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்  இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர். இது முந்தைய ஆண்டை விட 44.5 சதவீதம் குறைவாகும். 2022-ம் ஆண்டு 6.44 மில்லியன்  வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்  வருகை தந்துள்ளனர். இது முந்தைய ஆண்டை விட 321.5 சதவீதம்  அதிகமாகும். 2023-ம் ஆண்டு 9.24 மில்லியன்  வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்  வருகை தந்துள்ளனர். இது முந்தைய ஆண்டை விட 43.5 சதவீதம்  அதிகமாகும்.

தனியார்  சுற்றுலா நிறுவனங்கள், மாநில அரசுகள் ஆகியவை வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளுக்காக தொகுப்பு சுற்றுலா போன்ற சுற்றுலா திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இத்தகவலை மத்திய  சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

***

(Release ID: 2036815)

IR/AG/KR


(रिलीज़ आईडी: 2036956) आगंतुक पटल : 171
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Hindi_MP