புவி அறிவியல் அமைச்சகம்
தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை பெய்யக்கூடும்
प्रविष्टि तिथि:
29 JUL 2024 2:14PM by PIB Chennai
தென்னிந்திய தீபகற்பத்திற்கு உட்பட்ட தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கடலோர ஆந்திரா, ஏனாம், தெலங்கானா மற்றும் ராயலசீமா பகுதிகளில் அடுத்த ஐந்து நாட்களுக்கு ஆங்காங்கே விட்டுவிட்டு மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலோர கர்நாடகா, லட்சத்தீவுகள், கேரளா மற்றும் மாஹே பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும், உட்புற கர்நாடகாவில் இடி-மின்னலுடன் கூடிய மிதமான மழை பரவலாக பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளா, மாஹே மற்றும் தெற்கு உட்புற கர்நாடகாவில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2038407
***
MM/AG/KR
(रिलीज़ आईडी: 2038467)
आगंतुक पटल : 92