சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
நலிந்த பிரிவினருக்கு திறன் பயிற்சி அளிப்பதற்கான தேசிய செயல் திட்டம்
Posted On:
30 JUL 2024 3:23PM by PIB Chennai
நலிந்த பிரிவினருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து அவர்கள் சுயவேலைவாய்ப்பு அல்லது சம்பளம் பெறத்தக்க வேலைவாய்ப்புப் பெற்று சமூக- பொருளாதார ரீதியாக முன்னேற்றுவதற்காக பிரதமரின் தக்ஸ் திட்டம், மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருவதாக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு பி எல் வர்மா தெரிவித்துள்ளார்.
நலிந்த பிரிவினருக்கு திறன் பயிற்சி அளிப்பதற்கான பிரதமரின் தேசிய செயல் திட்டம் என்பது, ஷெட்யூல்டு வகுப்பினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர், பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினர், காகிதம் சேகரிப்போர் உள்ளிட்ட துப்புரவுத் தொழிலாளிகள், போன்ற பல்வேறு தரப்பினரின் போட்டித் திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு 2020-21-ல் மத்திய அரசால் தொடங்கப்பட்ட திட்டமாகும்.
மக்களவையில், எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ள அமைச்சர், இந்த்த் திட்டத்தின் கீழ் பயிற்சிப் பெறுவதற்கு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினரின் குடும்ப ஆண்டு வருமானம், 3 லட்சத்துக்குக் குறைவாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஷெட்யூல்டு வகுப்பினர், பழங்குடியினர் மற்றும் துப்பரவுத் தொழிலாளிகளுக்கு வருமான வரம்பு ஏதும் கிடையாது என்று அவர் கூறியுள்ளார். இந்த்த் திட்டத்திற்காக தற்போதைய பட்ஜெட்டில் ரூ.130 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் திரு பி எல் வர்மா தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2038978
***
MM/KPG/KR/DL
(Release ID: 2039139)