ஆயுஷ்
நாட்டில் உள்ள ஆயுஷ் ஆராய்ச்சி மையங்களின் நிலை
प्रविष्टि तिथि:
30 JUL 2024 5:47PM by PIB Chennai
ஹோமியோபதி ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில் (சிசிஆர்ஹெச்) என்பது ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தலைமை ஆராய்ச்சி நிறுவனமாகும். இந்நிறுவனம் தனது 27 ஆராய்ச்சி நிறுவனங்கள், 7 ஹோமியோபதி சிகிச்சை மையங்கள் மூலம் ஹோமியோபதி குறித்த அறிவியல் ஆராய்ச்சியை ஒருங்கிணைத்து, மேம்படுத்தி வருகிறது.
பொது மக்களிடையே ஹோமியோபதி மருத்துவத்தை பிரபலப்படுத்த தேசிய, மாநில அளவிலான ஆரோக்கிய முகாம்கள், கண்காட்சிகளில் சிசிஆர்ஹெச் பங்கேற்று வருகிறது. தகவல், கல்வி, தொடர்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, கண்காட்சிகள், சுகாதார முகாம்கள், கருத்தரங்குகள், உலக ஹோமியோபதி தின கொண்டாட்டம், முகநூல் பக்கங்கள், எக்ஸ் சமூக வலைதள கணக்கு போன்றவற்றின் மூலம் பொதுமக்களுக்கு தகவல் வழங்கப்படுகிறது.
இந்த கவுன்சில் சுகாதாரம் - குடும்ப நல அமைச்சகத்துடன் இணைந்து புற்றுநோய், நீரிழிவு, இதய நோய்கள் கட்டுப்பாட்டுக்கான தேசிய திட்டத்தின் கீழ் ஹோமியோபதியை ஒருங்கிணைத்தது. நடத்தை மாற்றத்தின் மூலம் மக்களுக்கு சுகாதார மேம்பாடு, தொற்றா நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிவதன் மூலம் நோய்த் தடுப்பு ஆகியவை இந்தத் திட்டத்தின் நோக்கங்களாகும்.
கொல்கத்தாவில் உள்ள தேசிய ஹோமியோபதி நிறுவனம் (என்ஐஎச்), ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பாகும். இந்நிலையம் தற்போது ஹோமியோபதி பட்டப்படிப்பை நடத்தி வருகிறது.
ஹோமியோபதி மருத்துவ நிபுணர்கள் தங்கள் பணியில் சமீபத்திய மருத்துவ ஆராய்ச்சியை பின்பற்றவும், ஹோமியோபதி ஆராய்ச்சிக்கு பங்களிக்கவும் தேசிய ஹோமியோபதி கவுன்சில் ஊக்குவிக்கிறது.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் ஆயுஷ் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு பிரதாப் ராவ் ஜாதவ் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
(रिलीज़ आईडी: 2039588)
आगंतुक पटल : 106