பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பழங்குடியின கூட்டுறவு சங்கங்களுக்கு சந்தை இணைப்பு வசதி

प्रविष्टि तिथि: 01 AUG 2024 12:54PM by PIB Chennai

பழங்குடியினரால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை கூட்டுறவு சங்கங்கள்  கொள்முதல் செய்யவும், அவற்றை விற்பனை செய்யவும், இந்திய பழங்குடியினர் கூட்டுறவு சந்தை மேம்பாட்டுக் கூட்டமைப்பு (TRIFED) மூலம், பிரதமரின் பழங்குடியினர் மேம்பாட்டு இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருவதாக, மத்திய பழங்குடியினர் நலத்துறை இணையமைச்சர் திரு துர்காதாஸ் உய்க்கி தெரிவித்துள்ளார்.

மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ள அவர் பழங்குடியினரின் உற்பத்திப் பொருட்கள், ட்ரைப்ஸ் இந்தியா  சில்லறை விற்பனை மையங்கள் வாயிலாகவும், ட்ரைப்ஸ் இந்தியா டாட் காம் எனப்படும் மின்னணு வர்த்தக தளம் வாயிலாகவும், அமேசான், ஃப்ளிப் கார்ட், ஸ்நாப் டீல், பேடிஎம் மற்றும் ஜெம் போன்ற தளங்கள் வாயிலாகவும் விற்பனை செய்யலாம் என கூறியுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2040019

***

(Release ID: 2040019)

MM/KPG/KR


(रिलीज़ आईडी: 2040104) आगंतुक पटल : 111
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Hindi_MP