வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் மின்சாரப் பேருந்து சேவை திட்டத்தின் கீழ் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மானியம்

இடுகை இடப்பட்ட நாள்: 01 AUG 2024 1:21PM by PIB Chennai

பிரதமரின் மின்சாரப் பேருந்து சேவை 16 ஆகஸ்ட், 2023 அன்று தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை 75 நகரங்கள் பங்கேற்று ஒப்புதல் அளித்துள்ளன.

இதுவரை, மஹாராஷ்டிரா மாநிலத்திற்கு 200.18 கோடி ரூபாய் மத்திய நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை நகரங்கள் / நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மின் கட்டமைப்பு மற்றும் கட்டுமானப் பணிமனை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

திட்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி, 10 ஆண்டுகளுக்கு அல்லது மார்ச் 2037 வரை இதில் எது முந்தியதோ அதுவரை மைய அரசின் நிதியுதவி வழங்கப்படுகிறது.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு. டோகான் சாஹு இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

*****

(Release ID: 2040049)

PKV/KV/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2040238) வருகையாளர் எண்ணிக்கை : 136
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Manipuri