கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
துறைமுகங்களில் அபாயகரமான பொருட்கள்
இடுகை இடப்பட்ட நாள்:
02 AUG 2024 1:55PM by PIB Chennai
துறைமுகங்களில் தொழில் பாதுகாப்பு தரத்தை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், துறைமுகத் தொழிலாளர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் நலனை உறுதி செய்யும் பொருட்டு, துறைமுகத் தொழிலாளர்கள் (பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் நலன்) சட்டம், 1986-ஐ இயற்றியுள்ளது.
அனைத்து பெரிய துறைமுகங்களிலும், இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள பொது தொழிற்சாலை ஆலோசனை சேவைகள் மற்றும் தொழிலாளர் நிறுவனங்கள் (DGFASLI) மத்திய அரசாக இருப்பதால், துறைமுகத் தொழிலாளர்கள் (பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் நலன்) சட்டம், 1986 மற்றும் அதன் கீழ் இயற்றப்பட்ட ஒழுங்குமுறைகள், 1990 ஆகியவற்றை அமல்படுத்தும் பொறுப்பு மத்திய அரசைச் சார்ந்ததாகும்.
பெரிய துறைமுகங்கள் நீங்கலாக மற்ற துறைமுகங்களுக்கு மாநில அரசே உரிய அதிகாரம் படைத்ததாகும்.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
***
MM/AG/KV
(வெளியீட்டு அடையாள எண்: 2040837)
வருகையாளர் எண்ணிக்கை : 123