சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
சிறுபான்மை சமூகத்தினருக்கான திட்டங்கள்
प्रविष्टि तिथि:
05 AUG 2024 4:13PM by PIB Chennai
சிறுபான்மை சமூகத்தினர் உட்பட ஒவ்வொரு பிரிவினரின், குறிப்பாக பொருளாதாரத்தில் நலிவடைந்த, சமுதாயத்தில் பின்தங்கிய பிரிவினரின் நலனுக்காகவும் மேம்பாட்டிற்காகவும் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
சிறுபான்மையினர் நல அமைச்சகம் குறிப்பாக மத்திய அரசால் அறிவிக்கை செய்யப்பட்ட ஆறு சிறுபான்மை சமூகங்களின், சமூக-பொருளாதார, கல்வி மேம்பாட்டிற்காக நாடு முழுவதும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்தத் திட்டங்கள் சிறுபான்மை சமூகங்களின் பலவீனமான பிரிவுகளுக்கானவை.
கல்வி ரீதியாக அதிகாரமளிக்கும் திட்டங்கள்
மெட்ரிக் கல்விக்கு முந்தைய படிப்புதவி திட்டம்
மெட்ரிக் கல்விக்கு பிந்தைய படிப்புதவி திட்டம்
தகுதி மற்றும் சராசரி அடிப்படையிலான உதவித்தொகை திட்டம்
1. வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார அதிகாரமளித்தல் திட்டங்கள்
பி.எம். விகாஸ் திட்டம் பின்வரும் கூறுகளை உள்ளடக்கியது. இது வேலைவாய்ப்பை மேம்படுத்துதல் மற்றும் இலக்கு வைக்கப்பட்ட பயனாளிகளுக்கு சிறந்த வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்குவதில் ஆதரவு ஆகியவற்றை இலக்காகக் கொண்டுள்ளது.
திறன் மற்றும் பயிற்சி கூறு
பெண்கள் தலைமைத்துவம் மற்றும் தொழில்முனைவோர் கூறு
கல்வி ஆதரவு கூறு (பள்ளி இடைநிற்றல்களுக்கு)
மேலும், இத்திட்டத்தின் நோக்கம் பயனாளிகளுக்கு கடன் மற்றும் சந்தை இணைப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது போன்ற திட்டங்களின் விவரங்கள் சிறுபான்மையினர் நல அமைச்சகத்தின் www.minorityaffairs.gov.in என்ற இணையதளத்தில் கிடைக்கின்றன.
இந்தத் தகவலை மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு மாநிலங்களவையில் இன்று எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.
***
(Release ID: 2041668)
SMB/RR/KR
(रिलीज़ आईडी: 2042057)
आगंतुक पटल : 95