சுரங்கங்கள் அமைச்சகம்
சுரங்க கண்காணிப்பு அமைப்புமுறை
प्रविष्टि तिथि:
07 AUG 2024 3:34PM by PIB Chennai
சுரங்க கண்காணிப்பு அமைப்புமுறை, 2016லிருந்து செயல்பட்டு வருகிறது. இது செயற்கைக்கோள் அடிப்படையிலான கண்காணிப்பு அமைப்புமுறையாகும், இது சட்டவிரோத சுரங்க நிகழ்வுகளைத் தடுப்பதில் மாநில அரசுகளுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சுரங்க குத்தகை பகுதியின் எல்லைக்கு வெளியே 500 மீட்டர் வரை உள்ள மண்டலத்தில் செயற்கைக்கோள் படங்களில் காணப்பட்ட எந்தவொரு அசாதாரண நிலப் பயன்பாட்டு மாற்றமும் படம்பிடிக்கப்பட்டு, சட்டவிரோத சுரங்கத்தை சரிபார்க்க மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது
சுரங்க கண்காணிப்பு அமைப்புமுறையில் குறிப்பிடப்பட்டுள்ள மொத்த சுரங்க குத்தகைகளின் எண்ணிக்கை 3405 ஆகும்.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் திரு. ஜி. கிஷன் ரெட்டி இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2042600
***
(रिलीज़ आईडी: 2042954)
आगंतुक पटल : 68