சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
நீண்டகால பயன்பாட்டிற்கான சில்க்யாரா சுரங்கப்பாதை
Posted On:
08 AUG 2024 12:10PM by PIB Chennai
தேசிய நெடுஞ்சாலை 134-ல் (பழைய தேசிய நெடுஞ்சாலை 94) இருவழி சில்க்யாரா வளைவு-பார்கோட் சுரங்கப்பாதை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில், அவசரகால வெளியேறும் பாதை அமைப்பதற்கான பிரிவை, தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டுக் கழகம் (என்.எச்.ஐ.டி.சி.எல்) சேர்த்துள்ளது.
இந்த சுரங்கப்பாதை, மையப்பகுதியில் ஒரு தடுப்புச் சுவருடன் கூடிய ஒற்றை குழாய் சுரங்கமாக கட்டப்பட்டு வருகிறது. இது அவசர காலங்களில் ஒருவருக்கொருவர் தப்பிக்கும் பாதையாக, இரு பாதைகளையும் பயன்படுத்த வழிவகுக்கிறது.
இமயமலைப் பகுதிகளில் வெட்டு மண்டலங்கள் பொதுவானவை; இதனைக் கருத்தில் கொண்டு, மலைப்பகுதிகளில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஒப்பந்தத்தின்படி அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் வழிமுறைகள் மூலம் தீர்க்கப்பட வேண்டிய வெட்டு மண்டலங்கள் போன்ற, அபாயங்களைக் கருத்தில் கொண்டு, இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மேலும், சில்க்யாரா சுரங்கப்பாதை திட்டம் இப்பகுதியின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமானது என்பதோடு, சார்தாமில் உள்ள முக்கிய புனித யாத்திரை தளமான யமுநோத்ரியுடன் ஆண்டு முழுவதும் இணைப்பை வழங்குகிறது. இந்த திட்டம் நாட்டின் முக்கியமான நீண்டகால நோக்கங்களுக்கும் உதவுகிறது.
வடிவமைப்பு, கட்டுமானம், செயல்பாடு மற்றும் பராமரிப்பு (O&M) ஆகியவற்றின் பல்வேறு நிலைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள், நெடுஞ்சாலை / சுரங்கப்பாதை திட்டங்களின் ஒருங்கிணைந்த பகுதியாகும். தேசிய நெடுஞ்சாலைகள் / சுரங்கங்களின் வடிவமைப்பு, கட்டுமானம் மற்றும் பராமரிப்புக்கு IRC குறியீடுகள் / வழிகாட்டுதல்களின்படி பொருத்தமான பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படுகின்றன.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
***
(Release ID: 2042964)
MM/AG/KR
(Release ID: 2043046)