சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
சர்வதேச பெரும் பூனை கூட்டணி தொடர்பான 100 நாள் இலக்கை சுற்றுச்சூழல்,வனத்துறை அமைச்சகம் எட்டியது
Posted On:
20 SEP 2024 6:28PM by PIB Chennai
பெரும் பூனைகளையும், அவை செழித்து வளரும் நிலப்பரப்புகளையும் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட சர்வதேச பெரும் பூனை கூட்டணி தொடங்கப்பட்டுள்ளது. புலி, சிங்கம், சிறுத்தை, பனிச்சிறுத்தை, பூமா, ஜாகுவார், சிவிங்கி புலி ஆகியவை ஏழு பெரும் பூனைகள். இவற்றில் புலி, சிங்கம், சிறுத்தை, பனிசிறுத்தை, சிவிங்கி புலி உள்ளிட்ட ஐந்து பெரும் பூனைகள் இந்தியாவில் காணப்படுகின்றன.
29.02.2024 அன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 2023-24 முதல் 2027-28 வரையிலான ஐந்தாண்டு காலத்திற்கு ரூ.150 கோடி ஒரு முறை பட்ஜெட் ஆதரவுடன் இந்தியாவின் தலைமையில் சர்வதேச பெரும் பூனை கூட்டணியை அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த கூட்டணி இயற்கை வளங்களின் நிலையான பயன்பாட்டில் கவனம் செலுத்துகிறது. பருவநிலை மாற்றத்தால் எழும் சவால்களைத் தணிக்கிறது. பெரும் பூனைகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாப்பதன் மூலம், இந்த சுற்றுச்சூழல் அமைப்புகளை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான சமூகங்களின் நல்வாழ்வுக்கு பங்களிக்கிறது.
கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் நகலை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் வனத்துறை ஐஜி இன்று சர்வதேச பெரும் பூனை கூட்டணியின் இடைக்காலத் தலைவரிடம் வழங்கினார்.
பெரும் பூனைகளின் பாதுகாப்பை, சர்வதேச பெரும் பூனை கூட்டணி நோக்கமாகக் கொண்டுள்ளது. பெரும் பூனைகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சியைத் தடுக்க இது பல நாடுகளையும் ஒரு பொதுவான தளத்தில் கொண்டு வரும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச்செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2057120
********
PLM/RS/KV
(Release ID: 2057154)