பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்
எம்சிஏ21 இணையதளத்தில் குறைகளைத் தீர்க்க சிறப்புக் குழு: பெரு நிறுவன விவகாரங்கள் அமைச்சகம் அமைத்துள்ளது
प्रविष्टि तिथि:
25 SEP 2024 10:33AM by PIB Chennai
பெரு நிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகம் எளிதாக வர்த்தகம் செய்வதை நோக்கி பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது, இதில் நிறுவனங்களை இணைத்தல், வெளியேறுதல், வரையறுக்கப்பட்ட பொறுப்புகளுக்கான ஒத்துழைப்புகளுக்கு விரைவான ஒப்புதல் அளிப்பது போன்றவை இதில் அடங்கும்.
இது தொடர்பாக, எம்சிஏ-21 இணையதளத்தில் நிறுவனங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட பொறுப்பு ஒத்துழைப்புகளுக்கான ஒழுங்குமுறை இணக்கங்களுக்காக, மின்னஞ்சல்கள், உதவி அமைப்பு, சமூக ஊடக உதவி போன்றவற்றின் மூலம் வழக்கமான மதிப்பாய்வு செய்யும் முறையை பெரு நிறுவன விவகாரங்கள் அமைச்சகம் கொண்டுள்ளது.
அவசர தன்மை கொண்ட பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான கூடுதல் நடவடிக்கையாக, ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு குறைகளை திறம்பட களைவதற்கும், தேவைப்பட்டால் முறையான தீர்வுகளைப் பரிந்துரைப்பதற்கும், எம்சிஏ-21 வலைதளத்தில் பங்குதாரர்கள் பின்பற்றுவதற்கு சிறந்த வழிகாட்டுதலை வழங்கும் நோக்கிலும் அமைக்கப்பட்டுள்ளது.
***
(Release ID: 2058445)
(रिलीज़ आईडी: 2058486)
आगंतुक पटल : 156