ஜவுளித்துறை அமைச்சகம்
'தூய்மையே சேவை 2024' திட்டத்தின் கீழ் தூய்மை இயக்கத்தை ஜவுளி அமைச்சகம் நடத்தியது.
Posted On:
25 SEP 2024 6:20PM by PIB Chennai
ஜவுளி அமைச்சகத்தின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் கள அலுவலகங்கள் “பழக்கவழக்கத் தூய்மை- கலாச்சாரத் தூய்மை” என்ற கருப்பொருளின் கீழ் 'தூய்மையே சேவை 2024' இயக்கத்தை மேற்கொண்டு வருகின்றன..
தேசிய பஞ்சாலைக் கழகம்
தேசிய ஜவுளிக் கழக ஊழியர்கள் 'தூய்மையே சேவை' என்ற தலைப்பில் கட்டுரை எழுதும் போட்டியில் பங்கேற்று, வெகுஜன தூய்மை இயக்கத்தை ஏற்பாடு செய்தனர்.
இந்திய சணல் கழகம்
தூய்மை மைய மக்கள் பங்கேற்பு திட்டத்தின் கீழ், இந்திய சணல் கழக ஊழியர்கள் துறை கொள்முதல் மையத்தில் உள்ள கிடங்கை சுத்தம் செய்தனர். ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் தூய்மையின் முக்கியத்துவத்தையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் பள்ளிகளில் தூய்மை கருப்பொருள் அடிப்படையிலான ஓவியப் போட்டி நடத்தப்பட்டது.
இந்திய பருத்தி கழகம்
தூய்மையே சேவையின் ஒரு பகுதியாக, இணைய சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கை இந்திய பருத்தி கழக அலுவலகங்களில் நடத்தப்பட்டது.
நெசவாளர் சேவை மையங்கள் இந்திய கைத்தறி தொழில்நுட்ப நிறுவனங்கள்:
உள்ளூர் மற்றும் பிராந்திய கலை, கலாச்சாரம், இசை மற்றும் நடன வடிவங்களுக்கான தூய்மை இந்தியா கலாச்சார விழாக்கள்' மேம்பாட்டு ஆணையர் அலுவலகம் (கைத்தறி) மற்றும் கள அலுவலகங்களான நெசவாளர் சேவை மையம் மற்றும் இந்திய கைத்தறி தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து தூய்மையே சேவை இயக்கத்தின் கீழ் நடத்தப்பட்டது.
***
PKV/RS/KV
(Release ID: 2058936)