பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
பணியாளர் மற்றும் பயிற்சித் துறையில் சிறப்பு இயக்கம் 4.0 முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது
Posted On:
30 OCT 2024 3:06PM by PIB Chennai
தூய்மையைக் கடைபிடித்தல் மற்றும் பணியிட செயல்திறனை மேம்படுத்துதல் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தேசிய தொலைநோக்கு பார்வையிலிருந்து உத்வேகம் பெற்று, பணியாளர் மற்றும் பயிற்சித் துறை அதன் தொடர்புடைய / துணை அமைப்புகளுடன் இணைந்து சிறப்பு இயக்கம் 4.0-ன் முக்கிய கட்டத்தில் தீவிரமாக பங்கேற்று வருகிறது. 2024 அக்டோபர் 2-ம் தேதி தொடங்கி அக்டோபர் 31 வரை தொடரும் இந்த இயக்கம், தூய்மையில் தாக்கத்தை ஏற்படுத்துதல், கவனம் செலுத்துதல் மற்றும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை ஏற்படுத்துதல், அலுவலகங்களில் நிலுவையில் உள்ள பணிகளைக் குறைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நாடு முழுவதும் பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் அனைத்து தொடர்புடைய மற்றும் துணை அலுவலகங்களிலிருந்தும் உற்சாகமான பங்கேற்பு காணப்பட்டது. இதுவரை 250-க்கும் மேற்பட்ட தூய்மை இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த முகாமின் போது, பணியாளர்களின் பணிச்சூழலை ஒட்டுமொத்தமாக மேம்படுத்தவும், அலுவலக அனுபவத்தை மேம்படுத்தவும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.
பதிவேடுகளை டிஜிட்டல் மயமாக்குதல், பாதுகாத்தல் மற்றும் அகற்றுதல் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
2024 அக்டோபர் 2 அன்று சிறப்பு இயக்கம் 4.0 தொடங்கியதிலிருந்து, 31,000-க்கும் மேற்பட்ட நேரடி கோப்புகள் மற்றும் 4800-க்கும் மேற்பட்ட மின்-கோப்புகள் மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. அகற்றுவதற்காக சுமார் 10,000 கோப்புகள் அடையாளம் காணப்பட்டு, அதில் 3500 கோப்புகள் அகற்றப்பட்டன. 90 கோப்புகள் இந்திய தேசிய ஆவணக் காப்பகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. இதுவரை 1500-க்கும் மேற்பட்ட மின்-கோப்புகள் நீக்கப்பட்டுள்ளன.
பழையப்பொருட்களை அகற்றியதன் மூலம் ரூ.96,516/- வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. பழைய பொருட்களை அப்புறப்படுத்தியது மற்றும் கோப்புகளை நீக்கியதன் காரணமாக சுமார் 1400 சதுர அடி இடம் காலியானது.
245 பொதுமக்கள் குறைதீர்ப்புகள், 12 நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்புகள், 3 மேலாண்மைக் குழு குறிப்புகள் (அமைச்சரவை முன்மொழிவுகள்), 68 மாநில அரசு குறிப்புகள், 2 பிரதமர் அலுவலக குறிப்புகள், 57 பொதுமக்கள் குறைதீர்ப்பு மேல்முறையீடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2069508
--------------
TS/IR/RS/RR
(Release ID: 2069579)