புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் செயல்திறனில் இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை நிறுவனம் 'சிறந்த' மதிப்பீட்டைப் பெற்றுள்ளது
Posted On:
08 JAN 2025 11:38AM by PIB Chennai
இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை நிறுவனம் (ஐஆர்இடிஏ) 2023-24-ம் நிதியாண்டில் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்துடன் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்காக98.24 மதிப்பெண்களுடன் 'சிறந்த' மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. ஐஆர்இடிஏ தொடர்ந்து நான்காவது ஆண்டாக 'சிறந்த' மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. இது அதன் சிறந்த செயல்பாட்டுக்கான உயர்ந்த தரங்களை வெளிப்படுத்துகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளில், ஐஆர்இடிஏ தொடர்ந்து சிறப்பான முடிவுகளை வழங்கியது. 2022-23-ம் நிதியாண்டில் 93.50, 2021-22-ம் நிதியாண்டில் 96.54, 2020-21-ம் நிதியாண்டில் 96.93 மதிப்பெண்களுடன் 'சிறந்த' மதிப்பீட்டைப் பெற்றது. இந்த நிலையான சாதனைகள் நாட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகளை அடைவதற்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பை சுட்டிக் காட்டுகின்றன.
இந்த சாதனை குறித்து பேசிய ஐஆர்இடிஏவின் தலைமை மேலாண்மை இயக்குநர் திரு பிரதீப் குமார் தாஸ், "தொடர்ந்து நான்காவது ஆண்டாக 'சிறந்த' மதிப்பீட்டைப் பெறுவது ஐஆர்இடிஏவின் குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும். இது தங்கள் ஊழியர்களின் அயராத முயற்சிகள், எங்கள் பங்குதாரர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை, மத்திய அரசின் வழிகாட்டுதலை பிரதிபலிக்கிறது என்று குறிப்பிட்டார். இந்த வெற்றிக்கு பங்களித்த அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக கூறினார். நாட்டின் பசுமை எரிசக்தி மாற்றத்தை விரைவுபடுத்துவதற்கும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகளை அடைவதற்கும் தாங்கள் உறுதிபூண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2091084
***
TS/IR/RR
(Release ID: 2091118)