தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தி, சேவைகளை விரிவுபடுத்த அஞ்சல் துறை நடவடிக்கை
Posted On:
06 FEB 2025 3:08PM by PIB Chennai
அஞ்சல் துறையில் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தவும், தொழில்நுட்பத்தை இணைக்கவும், சேவைகள் வழங்கப்படுவதை விரிவுபடுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
வேகமான பார்சல் விநியோகங்களுக்கு 233 மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவை தினசரி கையாளப்படும் பார்சல்களில் 30 சதவீதம் வரை விநியோகிக்கின்றன.
பார்சல்களைப பாதுகாப்பாகக் கையாளுவதற்கு வசதியாக 190 பார்சல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பார்சல்களை பேக்கேஜிங் செய்வதற்கு 1408 மையங்கள் நாடு முழுவதும் செயல்பட்டு வருகின்றன.
ஏடிஎம்கள், இணைய வங்கி, மொபைல் வங்கி மற்றும் சுமூகமான டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்காக அனைத்து தபால் நிலையங்களும் மின்னணு கேஓய்சி உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கும் ஒரு மைய வங்கியுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
அஞ்சல் நிலைய பாஸ்போர்ட் மையங்கள், நாடு முழுவதும் உள்ள குடிமக்களுக்கு பாஸ்போர்ட் சேவைகளை வழங்குகின்றன.
தொலைதூரப் பகுதிகளில் கூட பதிவு மற்றும் புதுப்பித்தல் சேவைகளை ஆதார் மையங்கள் வழங்குகின்றன.
பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டம் உள்பட அரசு மானியத் திட்டங்களுக்கான சரிபார்ப்பு செயல்பாட்டில் அஞ்சலகங்கள் உதவுகின்றன.
கங்கா தீர்த்தம் மற்றும் கோயில் பிரசாத விநியோகத்தில் அஞ்சலகங்கள் ஈடுபட்டுள்ளன.
தகவல் தொடர்பியல் இணையமைச்சர் டாக்டர் பெம்மாசானி சந்திர சேகர் இன்று ராஜ்யசபாவில் கேள்வி ஒன்று அளித்த எழுத்துப்பூர்வமாக பதிலில் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2100231
***
TS/GK/KPG/RR
(Release ID: 2100377)