சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதுதில்லியில் நஜாஃப்கர் ஊரக சுகாதாரப் பயிற்சி மையம், பாலம் ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர் ஆகியவற்றை மத்திய சுகாதார அமைச்சர் திரு ஜெ.பி நட்டா பார்வையிட்டார்

प्रविष्टि तिथि: 03 MAR 2025 3:20PM by PIB Chennai

புதுதில்லியில் நஜாஃப்கர் ஊரக சுகாதார மையம், பாலம் ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர் ஆகியவற்றை மத்திய சுகாதார அமைச்சர் திரு ஜெகத் பிரகாஷ் நட்டா இன்று பார்வையிட்டார். தெற்கு தில்லி மக்களவை தொகுதி உறுப்பினர் திரு ராம்வீர் சிங் பிதூரி, மேற்கு தில்லி மக்களவை தொகுதி உறுப்பினர் திருமதி கமல்ஜீத் ஷெராவத் ஆகியோர் உடனிருந்தனர்.

இரண்டு சுகாதார மையங்களிலும் நோயாளிகள் மற்றும் மருத்துவ ஊழியர்களுடன் திரு நட்டா கலந்துரையாடினார். இரு மையங்களின் வளாகங்களிலும் “ தாயின் பெயரால் ஒரு மரக்கன்று” திட்டத்தின் கீழ் அவர் மரக்கன்றுகளையும் நட்டார்.

திறன் மேம்பாட்டை வலியுறுத்திய அவர், ஒருங்கிணைந்த தொடக்க நிலை, உயர்நிலை, ஆயுஷ், பயிற்சி சேவைகளுக்கு மாதிரியாக விளங்கும் ஊரக சுகாதார பயிற்சி மையங்கள் பற்றி எடுத்துரைத்தார். மேலும் இந்த மையங்களில் சுகாதார வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு அளித்து வரும் ஆதரவையும் உறுதி செய்தார்.

மத்திய சுகாதாரத்துறை செயலாளர் திருமதி புண்ய சலீல ஸ்ரீவஸ்தவா, இணைச் செயலாளர் டாக்டர் மானஸ்வீ குமார், ஊரக சுகாதாரப் பயிற்சி மைய இயக்குனர் டாக்டர் ஜீ கௌசல்யா, சுகாதாரத்துறை மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2107742

----

TS/SMB/LDN/RR


(रिलीज़ आईडी: 2107790) आगंतुक पटल : 73
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi