தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
சுகாதார சவால்கள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை குறித்த கருத்தரங்கு - ஃபரிதாபாத்தில் மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா பங்கேற்றார்
Posted On:
06 MAR 2025 12:30PM by PIB Chennai
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையும் ஆரோக்கிய பாரதி அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த "சுகாதார சவால்கள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை" என்ற தலைப்பிலான கருத்தரங்கில் மத்திய தொழிலாளர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு மாண்டவியா, ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்குவதில் நோய்த்தடுப்பு சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். சரக், சுஷ்ருதர், பகவான் தன்வந்தரி போன்ற பழங்கால இந்திய மருத்துவ முன்னோடிகளின் ஞானத்தை எடுத்துரைத்த அமைச்சர், இந்தியாவின் வளமான சுகாதாரப் பாரம்பரியத்தை சுட்டிக்காட்டினார். நோய்த்தடுப்பு நடைமுறைகளில் முக்கிய அம்சங்களாக தியானம், யோகா, விரத நடைமுறைகள் ஆகியவை உள்ளதாக அவர் கூறினார். நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஆரோக்கிய முகாம்களை ஏற்பாடு செய்வதில் ஆரோக்கிய பாரதி அமைப்பின் முயற்சிகளை அவர் பாராட்டினார்.
திரு மாண்டவியா இந்த நிகழ்ச்சியின் போது, ஃபரிதாபாத்தில் உள்ள இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூன்று அதிநவீன மருத்துவ சாதனங்களின் பயன்பாட்டைத் தொடங்கி வைத்தார். ஆயுர்வேதத்தின் கடவுளான தன்வந்தரியின் சிலையையும் அமைச்சர் திறந்து வைத்தார்.
இந்த கருத்தரங்கில் மருத்துவர்கள், துணை மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், ஆரோக்கிய பாரதி அமைப்பினர் ஆகியோர் பங்கேற்றனர்,
***
(Release ID: 2108732)
TS/PLM/AG/RR
(Release ID: 2108770)