சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

தேசிய சணல் வாரியம் சார்பில் சணல் பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை மார்ச் 24 வரை சென்னையில் நடைபெறுகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 18 MAR 2025 8:23PM by PIB Chennai

 

மத்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட தேசிய சணல் வாரியம் சணல் பொருட்கள் மேம்பாட்டுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

கைவினைஞர்கள், சுய உதவிக் குழுக்கள், சணல் தொழில்முனைவோர், சணல் பொருட்கள் ஏற்றுமதியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் நலன்களை கருத்தில் கொண்டு தேசிய சணல் வாரியம் செயல்படுகிறது.

 

இதன் ஒரு பகுதியாக, சென்னையில் சணல் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனையை இந்த வாரியம் நடத்துகிறது. தமிழ்நாடு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மொத்தம் 20 சணல் தயாரிப்பு நிறுவனங்கள், இந்த கண்காட்சியில் சுற்றுச்சூழலுக்கு உகந்த சணல் தயாரிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளன. தொழில் முனைவோர் மேம்பாடு, கண்டுபிடிப்பு நிறுவனத்தின் தலைவர் மற்றும் இயக்குநர் திரு அம்பலவாணன், சணல் கண்காட்சியை 18 மார்ச் 2025 அன்று தொடங்கி வைத்தார்.

பல்வேறு மூத்த அரசு அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

சென்னை சைதாப்பேட்டையில் (சைதாப்பேட்டை காவல் நிலையம் பின்புறம்) உள்ள சைதாப்பேட்டை வர்த்தகர் அறக்கட்டளை மண்டபத்தில், மார்ச் 18 முதல் 24 வரை, காலை 11.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை இக்கண்காட்சி நடைபெறுகிறது.

  

***

AD/PLM/AG/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2112751) வருகையாளர் எண்ணிக்கை : 55
இந்த வெளியீட்டை படிக்க: English