ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாடாளுமன்றக் கேள்வி: உயர் தொழில்நுட்ப ஆடை மற்றும் நெசவு பூங்காக்கள்

Posted On: 21 MAR 2025 12:14PM by PIB Chennai

முதலீடுகளை ஈர்ப்பதற்கும், வேலைவாய்ப்புகள் உருவாக்கத்தை அதிகரிப்பதற்கும், உலகச் சந்தையில் வலுவாக தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கும், 2021-22 முதல் 2027-28 வரையிலான காலகட்டத்தில் ரூ.4,445 கோடி மதிப்பீட்டில் உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதியுடன் 7 பிரதமரின் மெகா ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலங்கள் மற்றும் ஆடை பூங்காக்களை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தப் பிரதமர் மித்ரா பூங்காக்களை அமைப்பதற்கு, தமிழ்நாட்டில் விருதுநகர், தெலங்கானா மாநிலத்தில் வாரங்கல், குஜராத்தில் நவ்சாரி, கர்நாடகாவில் கலபுராகி, மத்தியப் பிரதேச மாநிலத்தில் தார், உத்தரப் பிரதேச மாநிலத்தில் லக்னோ, மகாராஷ்டிராவில் அமராவதி ஆகிய 7 இடங்களை மத்திய அரசு இறுதி செய்துள்ளது.

இது தவிர, முதலீடுகளை அதிகரித்தல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் ஜவுளித் துறையில் ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கில், நாடு முழுவதும் உள்ள ஜவுளி மையங்களில் உலகத் தரம் வாய்ந்த, அதிநவீன உள்கட்டமைப்புடன் ஜவுளிப் பூங்காக்களை அமைக்கும் வகையில், ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா திட்டத்தையும் மத்திய ஜவுளி அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.

 

தமிழ்நாட்டில்  பல்லடம் மற்றும் குமாரப்பாளையத்தில் உயர்தொழில்நுட்ப பூங்காக்களும், கரூர் மற்றும் மதுரையில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காக்கள் அமைக்கும் பணிகளும் நிறைவடைந்துள்ளன.

இந்தத் தகவலை மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் ஜவுளித்துறை இணையமைச்சர் திரு. பபித்ரா மார்கெரிட்டா தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2113531   

***

TS/GK/RJ/RR


(Release ID: 2113646)
Read this release in: English , Urdu , Hindi