விவசாயத்துறை அமைச்சகம்
விளைபொருட்களின் சேமிப்பு கிடங்கு வசதிகளுக்கு மானியம்
Posted On:
21 MAR 2025 5:01PM by PIB Chennai
விவசாயிகளுக்கு சேமிப்பு கிடங்கு மானியம் வழங்கும் பல்வேறு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தூர்தர்ஷன், அகில இந்திய வானொலி மூலம் வெகுஜன ஊடக ஆதரவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், 18 மண்டல தூர்தர்ஷன் மையங்கள் மூலம் வாரத்தில் மூன்று நாட்கள் 30 நிமிட நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது. அகில இந்திய வானொலியில், இரண்டு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன.
மேலும் விவசாயிகளின் நலனுக்காக தேசிய மற்றும் மண்டல அளவில் செயல்படும் தனியார் தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகள் மூலம் ஒலி-ஒளி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் உள்ள முன்னணி செய்தித்தாள்களில் விளம்பரங்கள் மூலம் விழிப்புணர்வு மேற்கொள்ளப்படுகிறது. கிராமப்புறங்களில் மொபைல் மற்றும் இணைய பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களும் விளம்பரம் மற்றும் விழிப்புணர்வுக்காக பயன்படுத்தப்படுகின்றன.
வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை நாட்டில் தோட்டக்கலையின் முழுமையான வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டு இயக்கத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், 25 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குறைந்த விலை வெங்காய சேமிப்பு கட்டமைப்புக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ .1.75 லட்சம் மொத்த செலவில் 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.
இந்தத் தகவலை மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் திரு. ராம்நாத் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2113719
***
TS/GK/RJ/RR
(Release ID: 2113773)