அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
கொல்கத்தா மெகாசிட்டியில் அல்ட்ராஃபைன் ஏரோசல் (பிஎம் 2.5) மாசுபாட்டின் "நச்சுத்தன்மை தரநிலை"யை ஆய்வு அறிமுகப்படுத்துகிறது
Posted On:
11 APR 2025 3:15PM by PIB Chennai
கொல்கத்தாவில் நடத்தப்பட்ட ஒரு புதிய ஆய்வில், பி.எம் 2.5, அல்லது 2.5 மைக்ரோமீட்டர் விட்டம் கொண்ட துகள்கள், சுவாச மற்றும் இருதய பிரச்சினைகள் உள்ளிட்ட கடுமையான உடல்நல அபாயங்களை ஏற்படுத்தும் ஒரு குறிப்பிடத்தக்க காற்று மாசுபடுத்தி என்பது கண்டறியப்பட்டுள்ளது. இது காற்றின் தரத்தின் முக்கிய குறிகாட்டியாக விளங்குகிறது.
காற்று மாசுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கு மத்திய அரசு பல முயற்சிகளையும், கொள்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. இதில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் 2019-ல் தொடங்கப்பட்ட தேசிய தூய்மையான காற்று திட்டமும் ஒன்றாகும். 2026-ம் ஆண்டுக்குள் 40% மாசுதுகள்களை குறைப்பதில் இந்தத் திட்டம் கவனம் செலுத்துகிறது.
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி ஆராய்ச்சி நிறுவனமான போஸ் இன்ஸ்டிடியூட்டிற்கு, கொல்கத்தா நகரில் காற்று மாசுபாட்டைத் தணிவிப்பதற்கான ஒருங்கிணைப்பு நிறுவனமாகவும், என்சிஏபி-யின் கீழ் தேசிய அறிவுசார் கூட்டாளியாகவும் செயல்படும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவின் வளிமண்டலத்தில் வளிமண்டல ஏரோசால்களின் நச்சுத்தன்மையை இது ஆய்வு செய்தது.
பேராசிரியர் அபிஜித் சாட்டர்ஜி, அவரது முன்னாள் பி.எச்.டி மாணவர்கள் டாக்டர் அபிநந்தன் கோஷ், டாக்டர் மோனாமி தத்தா ஆகியோர் மொத்த ஏரோசல் மாசு சுமை அதிகரிப்புடன் நச்சுத்தன்மையின் அளவு எவ்வாறு மாறுகிறது என்பதை ஆராய்ந்தனர். சாலை தூசு, கட்டுமானம் / இடிப்பு தூசு, வாகன புகை வெளியேற்றம், தொழில்துறை உமிழ்வு போன்ற பல்வேறு காற்று மாசு ஆதாரங்களைக் குறைப்பதிலும் கட்டுப்படுத்துவதிலும் தேசிய தூய்மையான காற்று திட்டம் (என்சிஏபி) பயனுள்ளதாக இருப்பதையும் அவர்கள் கவனித்தனர்.
சயின்ஸ் ஆஃப் தி டோட்டல் என்விரான்மென்ட் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, கொல்கத்தாவில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்கவும், பயோமாஸ் / கழிவுகளை எரிப்பது குறித்து கடுமையான கண்காணிப்பை மேற்கொள்ளவும், கடுமையான நடவடிக்கை எடுக்கவும் உதவியுள்ளது. இது கடந்த குளிர்காலத்தில் (நவம்பர் 2024-பிப்ரவரி 2025) கொல்கத்தாவின் காற்றின் தரத்தில் பிரதிபலித்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2120919
***
TS/SMB/AG/RJ
(Release ID: 2120951)
Visitor Counter : 32