கலாசாரத்துறை அமைச்சகம்
அருணாச்சலப் பிரதேசத்தில் இரண்டு நாள் சர்வதேச மாநாட்டிற்கு சர்வதேச பௌத்த கூட்டமைப்பு ஏற்பாடு
இடுகை இடப்பட்ட நாள்:
15 APR 2025 4:43PM by PIB Chennai
சர்வதேச பௌத்த கூட்டமைப்பானது கலாச்சார அமைச்சகத்துடன் இணைந்து அருணாச்சல பிரதேசத்தின் நம்சாயில், “புத்த தம்மம் மற்றும் வடகிழக்கு இந்தியாவின் கலாச்சாரம்" என்ற தலைப்பில் இரண்டு நாள் சர்வதேச மாநாட்டை 2025 ஏப்ரல் 21-22 தேதிகளில் நடத்துகிறது. இந்த நிகழ்ச்சியில் அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் திரு. பெமா காண்டுவும், துணை முதலமைச்சர் திரு சௌனா மெயினும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அருணாச்சலப் பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம் மற்றும் திரிபுரா ஆகியவற்றை உள்ளடக்கிய வடகிழக்கு இந்தியா, பௌத்த மரபுகள், துறவற கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் குறிப்பிடத்தக்க மையமாக விளங்குகிறது.
இந்தப் பிராந்தியத்தில் புத்த தம்மத்தின் இருப்பை வலுப்படுத்த சுற்றுலா, பாரம்பரிய பாதுகாப்பு மற்றும் கலாச்சார பரிமாற்ற திட்டங்களை மேம்படுத்துவதற்கான பல முயற்சிகளை மத்திய அரசு தீவிரமாக எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக 2 நாள் சர்வதேச மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2121860
***
TS/GK/AG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2121883)
வருகையாளர் எண்ணிக்கை : 49