WAVES BANNER 2025
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

வேவ்ஸ் உடைக்கேற்ற நடிப்பு (காஸ்ப்ளே) போட்டிக்கான இறுதிப் போட்டியாளர்கள் அறிவிப்பு

 இடுகை இடப்பட்ட நாள்: 16 APR 2025 2:01PM |   Location: PIB Chennai

கடந்த சனிக்கிழமை, ஹைதராபாத்தில் நடைபெற்ற வேவ்ஸ் உடைக்கேற்ற நடிப்பு போட்டி நிகழ்ச்சியில் படைப்பாளர்கள் தங்களது அசாத்திய திறமைகளை வெளிப்படுத்தினர். மும்பையில் நடைபெறும் உலக ஒலி - ஒளி மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாட்டில் இடம் பெறவுள்ள காஸ்ப்ளே போட்டியில் இறுதிச் சுற்றில் பங்கேற்க உள்ள போட்டியாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.  இந்திய காமிக்ஸ் சங்கம் மற்றும் படைப்பாளர்கள் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.  எபிகோ-கான் நிறுவனம் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், டிவிஏஜிஏ அமைப்பு  ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த, இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. வார இறுதியில் காஸ்ப்ளே மற்றும் அனிமேஷன் தொடர்பான போட்டிகளில் இந்த நிகழ்வு மிகவும் பிரபலமாகியது.

தற்போது, ஹைதராபாத், மும்பை நகரங்களில் நடைபெற்ற சந்திப்புகளில், காஸ்ப்ளே போட்டிக்கான இறுதிச் சுற்றில் பங்கேற்க உள்ள 29 போட்டியாளர்களின் படைப்பாற்றல் திறன்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

வேவ்ஸ் உச்சிமாநாட்டில் இடம் பெறும் முக்கிய போட்டிகள் தவிர ஏப்ரல் 19-ம் தேதி மும்பையில்  வைல்டு கார்டு மூலம் போட்டிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த நிகழ்வில், வைல்டு கார்டு  மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்கள் இறுதிப் போட்டிகளில் பங்கேற்பார்கள்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2122055

 

----

TS/SV/KPG/KR


வெளியீட்டு அடையாள எண்: 2122115   |   Visitor Counter: 34