தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் சுரங்க பாதுகாப்பு தலைமை இயக்குநரகத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார்
प्रविष्टि तिथि:
18 APR 2025 4:24PM by PIB Chennai
மத்தியத் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா, ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் உள்ள சுரங்கப் பாதுகாப்பு தலைமை இயக்குநரகத்தின் (டிஜிஎம்எஸ்) தலைமை அலுவலகத்திற்கு இன்று (18.04.2025) சென்றார். அங்கு அந்த அலுவலகத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்த அவர், சுரங்கத் துறையில் பாதுகாப்பு நடைமுறைகளை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
நாடு முழுவதும் உள்ள சுரங்கத் தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்க முக்கிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்து, இந்தியாவின் சுரங்கப் பாதுகாப்பு கட்டமைப்பை மதிப்பீடு செய்து அதன் அடிப்படையில் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அவர் இந்த ஆய்வை மேற்கொண்டார். உயர் அதிகாரிகளுடன் விரிவான ஆய்வுக் கூட்டமும் நடைபெற்றது.
சுரங்கத் துறையில் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரச் சேவைகளை மேம்படுத்த நல் ஆளுகை, மாநில அரசுகளுடனான ஒருங்கிணைப்பின் முக்கியத்துவம் ஆகியவற்றை மத்திய அமைச்சர் வலியுறுத்தினார். கூட்டத்தைத் தொடர்ந்து, அலுவலகத்தில் அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா மரக்கன்றுகளை நடும் நடவடிக்கையையும் மேற்கொண்டார்.
***
(Release ID: 2122685)
SV/PLM/RJ
(रिलीज़ आईडी: 2122712)
आगंतुक पटल : 66