விண்வெளித்துறை
இந்திய விண்வெளி வீரரைச் சுமந்து செல்லும் சர்வதேச விண்வெளி இயக்கத்தை அடுத்த மாதம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது: மத்திய இணையமைச்சர் திரு ஜிதேந்திர சிங்
प्रविष्टि तिथि:
18 APR 2025 4:28PM by PIB Chennai
இந்தியா தனது விண்வெளி பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதத் தயாராக உள்ளது எனவும் இந்திய விண்வெளி வீரரைச் சுமந்து செல்லும் சர்வதேச விண்வெளி இயக்கத்தை அடுத்த மாதம் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது எனவும் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், விண்வெளித் துறை இணையமைச்சர்(தனிப் பொறுப்பு)திரு ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
வரவிருக்கும் மாதங்களில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் முக்கிய எதிர்காலத் திட்டங்கள் குறித்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு திரு ஜிதேந்திர சிங் கூறுகையில், அடுத்த மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குப் (ஐஎஸ்எஸ்) பயணம் மேற்கொள்ள இந்தியக் குழுவின் கேப்டன் சுபான்ஷு சுக்லா தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
இந்தியா தனது அடுத்த விண்வெளி மைல்கல்லை எட்டத் தயாராக உள்ளது என்று திரு ஜிதேந்திர சிங் கூறினார். வரவிருக்கும் மனித விண்வெளிப் பயணத்தின் முக்கியத்துவத்தையும், தொடர்ச்சியாக இஸ்ரோ மேற்கொள்ள இருக்கும் பயணங்களையும் அவர் எடுத்துரைத்தார்.
விண்வெளித் துறை செயலாளரும், இஸ்ரோ தலைவருமான டாக்டர் வி. நாராயணன், செயல்படுத்தவிருக்கும் பல்வேறு விண்வெளித் திட்டங்களின் நிலை குறித்து விளக்கிக் கூறினார்.
***
(Release ID: 2122687)
SV/PLM/RJ
(रिलीज़ आईडी: 2122724)
आगंतुक पटल : 108