பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
நகர்ப்புற எரிவாயு விநியோகத்தின் கீழ் சிஎன்ஜி(போக்குவரத்து), பிஎன்ஜி (வீட்டு உபயோகம்) பிரிவுகளுக்கு சிக்கனமான செலவில் உள்நாட்டு இயற்கை எரிவாயு கிடைப்பதை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது
प्रविष्टि तिथि:
18 APR 2025 5:10PM by PIB Chennai
தூய்மையான எரிசக்தி அணுகலை ஊக்குவித்தல், நகர்ப்புற காற்றின் தரத்தை மேம்படுத்துதல், உள்நாட்டு எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துதல் என்ற தொலைநோக்குப் பார்வைகளுடன் இணைந்து, உள்நாட்டு இயற்கை எரிவாயுவுக்கான ஒதுக்கீட்டு கட்டமைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட முக்கிய கொள்கை நடவடிக்கைகளை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
போக்குவரத்தில் பயன்படுத்தப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (சிஎன்ஜி), வீடுகளில் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் குழாய் வழி இயற்கை எரிவாயு (பிஎன்ஜி) போன்ற முக்கிய பிரிவுகளுக்கு நீடித்த கிடைக்கும் தன்மையையும் சிக்கனமான விலையையும் உறுதி செய்வதில் கவனம் செலுத்தும் வகையில், பெட்ரோலியம் - இயற்கை எரிவாயு அமைச்சகம் உள்நாட்டு எரிவாயு ஒதுக்கீட்டுக் கொள்கையில் முக்கியமான நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி முன்கூட்டிய காலாண்டு ஒதுக்கீடு மேற்கொள்ளப்படும். உள்நாட்டு இயற்கை எரிவாயு ஒதுக்கீடுகள் இரண்டு காலாண்டுகள் முன்கூட்டிய அடிப்படையில் செய்யப்படும். நகர்ப்புற எரிவாயு விநியோகத் துறையில் தேவை அதிகரித்து வந்தாலும், வீட்டு எரிவாயுவின் ஒதுக்கீடு விகிதங்கள் பரவலாகப் பராமரிக்கப்படும்.
அரசின் இந்த உத்திசார் நடவடிக்கைகள், தேவைக்கு ஏற்ப விநியோகத்தைத் திறம்பட நிர்வகிப்பதற்கு வழிவகுக்கும். இது இந்தியா முழுவதும் உள்ள கோடிக் கணக்கான நகர்ப்புற மற்றும் புறநகர் நுகர்வோர்களுக்குப் பயனளிக்கும்.
***
(Release ID: 2122694)
SV/PLM/RJ
(रिलीज़ आईडी: 2122752)
आगंतुक पटल : 54