அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
உயிரி தொழில்நுட்பத் துறையானது உயிர்தொழில்நுட்பத் தொழில் ஆராய்ச்சி உதவிக் குழுமத்துடன் இணைந்து "செல் மற்றும் மரபணு சிகிச்சை" என்ற கருப்பொருளில் 12-வது இணைய வழிக் கருத்தரங்கை நடத்தியது
Posted On:
18 APR 2025 6:03PM by PIB Chennai
மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பத் துறையானது பைராக் (BIRAC) எனப்படும் உயிரித் தொழில்நுட்பத் தொழில் ஆராய்ச்சிக் குழுமத்துடன் இணைந்து 12வது இணைய வழிக் கருத்தரங்கை நேற்று (17.04.2025) நடத்தியது. இந்த அமர்வு "செல் மற்றும் மரபணு சிகிச்சை" என்ற கருப்பொருளில் நடைபெற்றது.
பயோ இ-3 (Economy -பொருளாதாரம், Environment - சுற்றுச் சூழல், Employment - வேலைவாய்ப்பு) கொள்கையின் கீழ் இது நடத்தப்பட்டது. ஆகஸ்ட் 2024-ல் மத்திய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட பயோ இ3 கொள்கை, உயிரி அடிப்படையிலான கண்டுபிடிப்புகளில் இந்தியாவை உலகளாவிய முன்னணி நாடாக நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சிக்கலான மற்றும் முன்னர் சிகிச்சையளிக்க முடியாத நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான திறனுடன் "செல் மற்றும் மரபணு சிகிச்சை" என்பது பயோ இ3 கொள்கையின் ஒரு முன்னுரிமைப் பிரிவாகும். இந்த இணையவழிக் கருத்தரங்கில் கல்வியாளர்கள், தொழில்துறை தலைவர்கள், புத்தொழில் நிறுவனத்தினர், ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றனர். இப்பிரிவில் முன்னேற்றங்கள் மற்றும் செல், மரபணு சிகிச்சையில் உள்ள வாய்ப்புகளைப் பற்றி விவாதிக்க ஒரு தளத்தை இது வழங்கியது.
***
(Release ID: 2122720)
SV/PLM/RJ
(Release ID: 2122759)
Visitor Counter : 36