சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
புதுவைப் பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டு உளவியல் துறை, “நவீன உலகில் உளவியல் துறையில் பன்முகத் தன்மை கொண்ட பங்களிப்புகள்” என்ற தலைப்பில் ஒருநாள் பயிலரங்கை நடத்தியது
प्रविष्टि तिथि:
23 APR 2025 6:26PM by PIB Chennai
நவீன உலகில் உளவியல் துறையின் பன்முகத்தன்மை குறித்த இந்தப் பயிலரங்கின் முக்கிய நோக்கம், உளவியல் துறை சார்ந்த பல்வேறு அம்சங்கள் குறித்த விழிப்புணர்வை பல்கலைக்கழகத்தின் அனைத்து துறைகளுக்கும் ஏற்படுத்துவதுடன், மாணவ, மாணவிகள் மனநலத்துடனும் சமூகத்தில் அனைத்து சவால்களையும் எதிர்கொள்ளும் சூழலை ஏற்படுத்துவதற்கும் உளவியல் துறையை எளிதில் அனைவரும் அணுகக்கூடிய வகையில் மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதும் ஆகும்.
இந்த நிகழ்ச்சியில் நவீன உளவியல் துறை சார்ந்த சவால்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, மனநலம் மீட்பு திறன், இளையோர் மேம்பாடு, நவீன உறவுமுறைகளின் இயக்கவியல் ஆகியவை தொடர்பாக அமர்வுகள் நடைபெற்றன.
G7N7.JPG)
இந்தப் பயிலரங்கின் தொடக்க உரையில், பயன்பாட்டு உளவியல் துறை தலைவர் பேராசிரியர் சிப்நாத் தேப், தொழில்நுட்ப முன்னேற்றங்களால் உருவாகும் இயந்திரதன்மை, அதிருப்தி, மன அழுத்தம், உளவியல் ரீதியிலான துன்பங்கள் போன்றவைகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். மக்கள் தொகை அதிகரிப்பு, உலகமயமாக்கல், பொருளாதார சுதந்திரம், சமத்துவக்குறைபாடுகள் போன்றவை வாழ்க்கை தரத்தில் நேர்மறை மற்றும் எதிர்மறை தாக்கங்களை ஏற்படுத்தி வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், தொற்று நோய், மாசு, வன்முறை, போர், பொருளாதாரப் பிளவு, ஊழல், இயற்கை பேரழிவுகள், உணவுத் தட்டுப்பாடு போன்றவை, மக்களின் வாழ்க்கையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் காரணிகளாக உள்ளது என்று குறிப்பிட்டார். இத்தகைய சூழலில், உளவியல் நிபுணர்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் கூறினார். கற்பித்தல், ஆலோசனை, மனநோய் பரிசோதனை, மனிதவள மேலாண்மை, திட்டமிடல், கொள்கை உருவாக்கம், சமூக மேம்பாடு, குடும்ப ஆலோசனை, குற்றவியல் விசாரணை உள்ளிட்ட பலவகையான துறைகளில் உளவியல் நிபுணர்களின் பங்களிப்பு இன்றியமையாதது என்று அவர் தெரிவித்தார்.
TIZW.JPG)
புதுவைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பி. பிரகாஷ் பாபு, பேராசிரியர் சிப்நாத் தேப் அவர்கள் கூறிய கருத்துகளை ஆதரித்து உரையாற்றினார். “உளவியல் நிபுணர்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பரிமாணத்திலும் முக்கிய பங்காற்றுபவர்களாக” உள்ளனர் என்று கூறினார். நரம்பியல் மருத்துவராக, தன்னுடைய மருத்துவ அனுபவங்களும், மனநல மேலாண்மையில் இடம்பெறும் உளவியல் ரீதியிலான பங்களிப்பு குறித்தும் அவர் பகிர்ந்து கொண்டார்.
பின்னர், மனிதவளத் துறையின் முதன்மையர் பேராசிரியர் டி. சுல்தானா, தனது அனுபவங்கள் மற்றும் செயல்முறைகளை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார். தொழில்நுட்ப அமர்வுகளில் பேராசிரியர் பி. ரங்கையா, பாதிப்புக்குப் பின்னர் ஏற்படும் வளர்ச்சி குறித்தும், பேராசிரியர் பரணிகாந்த், மனித உறவுகள் மற்றும் அதன் தாக்கங்கள் குறித்தும், ரெஜாய்சன் தங்கால், பொதுவான உளவியல் பிரச்சனைகள், அதற்கான தீர்வுகள் குறித்தும் உரையாற்றினார்கள்.
இறுதி அமர்வில், பேராசிரியர் சிப்நாத் தேப், மனநலம் மற்றும் தொழில்துறை முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகளில் உளவியல் துறையின் பங்களிப்பு, இளைஞர்கள் சீரான வளர்ச்சியை எவ்வாறு அடைய முடியும் என்பதையும் விரிவாக எடுத்துரைத்தார்.
இறுதியாக இந்த ஒருநாள் பயிலரங்கு, நவீன உலகில் உளவியல் துறையின் பன்முக பங்களிப்பு குறித்த விழிப்புணர்வை உருவாக்கி, மனநலத்தை மேம்படுத்தும் நோக்கில் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
***
SV/DL
(रिलीज़ आईडी: 2123900)
आगंतुक पटल : 36
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English