நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
கோதுமை கொள்முதல் 250 லட்சம் மெட்ரிக் டன்னைத் கடந்தது
प्रविष्टि तिथि:
01 MAY 2025 1:40PM by PIB Chennai
2025-26 ரபி சந்தைப் பருவத்தில் நாடு முழுவதும் உள்ள முக்கிய மாநிலங்களில் கோதுமை கொள்முதல் சுமூகமாக நடந்து வருகிறது. 2025-26 ரபி சந்தைப் பருவத்தில் கோதுமை கொள்முதல் செய்ய நிர்ணயிக்கப்பட்ட 312 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை இலக்குக்கு ஒப்ப, மத்திய தொகுப்பில் இதுவரை 256.31 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதி வரை கொள்முதல் செய்யப்பட்ட கோதுமையின் அளவு ஏற்கனவே இதே தேதியில் கடந்த ஆண்டின் மொத்த கொள்முதலான 205.41 லட்சம் மெட்ரிக் டன்னை கடந்துள்ளது. இது 24.78% அதிகமாகும். பஞ்சாப், ஹரியானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய 5 முக்கிய கோதுமை கொள்முதல் செய்யும் மாநிலங்களும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக கோதுமையை கொள்முதல் செய்துள்ளன.
2025-26 ரபி சந்தைப் பருவத்தில் மொத்தம் 21.03 லட்சம் விவசாயிகள் ஏற்கனவே பயனடைந்துள்ளனர். மொத்த குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.62155.96 கோடி அளவிற்கு விடுவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப், ஹரியானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களில் இருந்து முறையே 103.89 லட்சம் மெட்ரிக் டன், 65.67 லட்சம் மெட்ரிக் டன், 67.57 லட்சம் மெட்ரிக் டன், 11.44 லட்சம் மெட்ரிக் டன் மற்றும் 7.55 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2125722
*****
SM/IR/KPG/RJ
(रिलीज़ आईडी: 2125796)
आगंतुक पटल : 52