பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்
மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் கொல்கத்தாவில் 'கார்ப்பரேட் பவன்' அலுவலகத்தைத் திறந்து வைத்தார்
प्रविष्टि तिथि:
01 MAY 2025 4:30PM by PIB Chennai
மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் கொல்கத்தாவின் நியூ டவுனில் 'கார்ப்பரேட் பவனை' இன்று திறந்து வைத்தார். இந்த புதிய அலுவலகத்தில் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் பல்வேறு அலுவலகங்கள், கிழக்கு பிராந்திய இயக்குநரகம் நிறுவனங்களின் பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் ஒரே குடையின் கீழ் செயல்படும்.
நிகழ்ச்சியில் பேசிய திருமதி நிர்மலா சீதாராமன், உரிய நேரத்தில் பெருநிறுவன ஒழுங்குமுறை சேவைகளை வழங்கும் இடமாக இந்த பெருநிறுவன பவன் திகழும் என்று கூறினார். கார்ப்பரேட் பவனில் சேவைகளை ஒருங்கிணைப்பதன் மூலம் செலவுகளைக் கணிசமாகக் குறைக்கவும், ஒப்புதல் அளிக்கும் செயல்முறைகளை விரைவுபடுத்தவும், செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தவும் முடியும் என்று அவர் தெரிவித்தார்.
இந்த ஏழு மாடி கட்டடம் 13,239 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டதாகவும் இதற்கான மொத்த செலவு 150.43 கோடி ரூபாய் ஆகும்.
*****
(Release ID: 2125779)
SM/PLM/SG/RJ
(रिलीज़ आईडी: 2125842)
आगंतुक पटल : 62